Home செய்திகள் குழந்தைகள் ஆபாச படத்தை 2 வருஷமாக பார்த்து வரும் இளைஞர்

குழந்தைகள் ஆபாச படத்தை 2 வருஷமாக பார்த்து வரும் இளைஞர்

193
0

குழந்தைகள் சம்பந்தப்பட்ட ஆபாச வீடியோவை பார்க்கக்கூடாது என்று மட்டுமல். செல்போனிலேயே வைத்திருக்கக்கூடாது என்று கூடுதல் டிஐஜி ரவி எச்சரிக்கை விடுத்திருந்தார். ஏதோ கடமைக்காக சொல்கிறார்கள் என்று சில குரூர இளைஞர்கள் நினைத்து விட்டார்கள் போல இருக்கிறது!!

சிறார் வன்கொடுமை தடுப்பு சட்டத்தை குறைப்பதற்காகவே இப்படி ஒரு அதிரடியில் போலீசார் இறங்கி உள்ளனர். அதனாலேயே இது சம்பந்தமாக ஆங்காங்கே ஆபாச படம் பார்ப்பவர்கள் கிட்டத்தட்ட 15 பேரை பிடித்து கைது செய்தும் வருகிறார்கள். இவ்வளவு விஷயங்கள் தெரிந்தும், இளைஞர் ஒருவர் திரும்பவும் அந்த படத்தை பார்த்துள்ளார்.

சென்னை அம்பத்தூர் கள்ளிகுப்பம் விபிசி நகர் பகுதியை சேர்ந்தவர் ஹரீஷ்(24) தடைசெய்யப்பட்ட குழந்தைகள் தொடர்பான ஆபாச வீடியோவை தன்னுடைய டவுன்லோடு செய்து பார்த்துள்ளதாக போலீசாருக்கு விவரங்கள் கிடைத்தது. பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து முடித்துள்ளார். “அந்த” மாதிரியான படங்களை பார்ப்பதுதான் ஹாபி. அதாவது 11-ம் வகுப்பு படிக்கும்போதிருந்தே. 500 ஆபாச வீடியோக்கள் வரை டவுன்லோடு செய்து பார்த்து ரசித்து வந்துள்ளார். இவர் ஒரு டியூஷன் டீச்சரின் மகன் என்பது கூடுதல் தகவல்!

இதையடுத்து விரைந்து சென்ற போலீசார் வழக்குப்பதிவு செய்து ஹரிஷை கைது செய்தனர். இவரிடம் நடத்திய விசாரணையில் குழந்தைகள் ஆபாச படத்தை 2 வருஷமாக பார்த்து வருவது தெரிந்தது. மேலும் அவரது செல்போனை வாங்கி ஆய்வு செய்தனர். அப்போதுதான் போலீசாருக்கு மேலும் அதிர்ச்சியானது. 500 ஆபாச வீடியோக்களை இதுவரை ஹரீஷ் டவுன்லோடு செய்திருக்கிறார்.

Advertisements

Leave a Reply