Home பயணம் ஏற்காடு காண வேண்டிய இடங்கள்

ஏற்காடு காண வேண்டிய இடங்கள்

202
0

ஏற்காடு சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு அழகிய சுற்றுலாத் தளமாகும். ஏற்காடு மலை மிகவும் அழகானது. இதன் காரணமாக ஏற்காடு மலையேற்றம் இங்கு மிக விரும்பத்தக்கதாக அமைந்துவிடுகிறது. இது ஏழைகளின் ஊட்டி என்று புகழப்படுகிறது. ஏனெனில் இங்கு செல்பவர்களுக்கு ஊட்டி செல்லும் அளவுக்கு கூட செலவு ஆகாது.

ஏற்காடு ஏரி – மரகத ஏரி என்றும் அழைக்கப்படும் இந்த ஏற்காடு ஏரி, தமிழ்நாட்டில் உள்ள மலைகளில் தானாக உருவான ஏரிகளில் ஒன்றாகும். ஏரியின் நடுவில் ஓர் நீருற்றும் அமைந்துள்ளது.

லேடி சீட் – ஏற்காட்டில் இருந்து 2 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இந்த இடம். இங்கிருந்து தொலைநோக்கி மூலம் சேலம் மாநகரைக் கண்டு ரசிக்கலாம். இரவு நேரங்களில் மலையில் இருந்து சேலம் மாநகர் ஒளி வெள்ளத்தில் ஜொலிப்பதையும் காணலாம்.

கிள்ளியூர் அருவி – ஏற்காடு ஏரியில் இருந்து 3 கி.மீ தொலைவில் கிள்ளியூர் அருவி அமைந்துள்ளது . மழைக் காலங்களில் தண்ணீர் அதிகம் கொட்டும் நேரத்தில் இங்கு செல்வது சிறந்தது.

பகோடா பாயிண்ட் – இங்கிருந்தும் சேலம் மாநகரை காணலாம், மேலும் இங்கிருந்து காக்கம்பாடி எனும் கிராமத்தையும் காண முடியும்.

சேர்வராயன் கோவில்: – மலை உச்சியில் அடுக்கடுக்காக அமைந்துள்ளது. ஒரு மெல்லிய குகையில் அமைந்துள்ள இக்கோயில் தேவி காவேரிக்கும் சேர்வராயன் கடவுளுக்கும் கட்டப்பட்டுள்ளது.

கரடியூர் காட்சி முனை – இது ஏற்காட்டில் இருந்து12 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

திரிபுர சுந்தரி அம்மன் கோவில் – இது ஏற்காட்டில் இருந்து7 கி.மீ தொலைவில் நாகலூர் லலிதா திரிபுரசுந்தரி திருக்கோயில், சேலம் நாகலூர் என்ற கிராமத்தில் அமைந்துள்ளது.

நல்லூர் அருவி – ஏற்காட்டில் இருந்து 20 கி.மீ தொலைவில் நல்லூர் என்ற கிராமத்தில் அமைந்துள்ளது. மழைக் காலங்களில் தண்ணீர் அதிகம் கொட்டும் நேரத்தில் இங்கு செல்வது சிறந்தது.

Advertisements

Leave a Reply