Home செய்திகள் உலக செய்திகள் செல்போன் ஆக்கிரமித்த உலகு

செல்போன் ஆக்கிரமித்த உலகு

183
0

செல்போன் கையில் இல்லாத மனிதர்களைப் பார்ப்பதே அரிது என்றாகிவிட்டது. வீட்டில், தெருவில், அலுவலகத்தில், உணவகத்தில், தியேட்டரில், கடற்கரையில், படுக்கையறையில் என எங்கு இருந்தாலும் செல்போனை வெறித்துக்கொண்டிருப்போர் ஏராளம்.

அந்த செல்போன் இல்லாவிட்டால், அவர்கள் எப்படி இருப்பார்கள் என்று அமெரிக்க புகைப்படக்காரர் எரிக் பிக்கர்ஸ்கில் கற்பனை செய்துபார்த்திருக்கிறார். செல்போன் பயன்படுத்திக்கொண்டிருக்கும்போது அவர்களிடமிருந்து அதைப் பிடுங்கிவிட்டு, அந்தக் கணத்தைத் தன் கேமராவில் உறையச்செய்திருக்கிறார் அவர்.

ஒரு கருவிக்கு மனிதர்கள் அடிமையானதைச் சொல்லும் இந்தப் புகைப்படங்கள், மிகப் பெரும் வெறுமையை நமக்கு உணர்த்துகின்றன. ‘ரிமூவ்ட்’ என்ற தளத்தில் ஒரு தொடராக வெளியிடத் திட்டமிட்டிருக்கும் எரிக், அமெரிக்காவையும் வியட்நாம், மியான்மர், சிங்கப்பூர், இந்தோனேஷியா போன்ற ஆசியவாசிகளையும் புகைப்படம் எடுத்திருக்கிறார். அடுத்தது இந்தியாதான்!

Advertisements

Leave a Reply