Home செய்திகள் நேர கட்டுப்பாடின்றி பெண்கள் வெளியே செல்லலாம் – கேரள மந்திரி சைலஜா

நேர கட்டுப்பாடின்றி பெண்கள் வெளியே செல்லலாம் – கேரள மந்திரி சைலஜா

164
0

தெலுங்கானாவில் ஐதராபாத்தை சேர்ந்த கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டி, கடந்த நவம்பர் 27ந்தேதி ஐதராபாத்தில் சம்சாபாத் பகுதியில் உள்ள வீட்டில் இருந்து 2 சக்கர வாகனத்தில் சென்றவர், வழியில் ஒரு சுங்க சாவடி அருகே தனது வாகனத்தை நிறுத்தி விட்டு அங்கிருந்து கால்டாக்சியில் பணிக்கு சென்றுள்ளார்.

இரவு 9 மணிக்கு பணி முடித்து வீடு திரும்பும்போது அவரது இரு சக்கர வாகனம் பஞ்சராகி இருந்தது. அவருக்கு உதவுவது போல் நடித்த 4 பேர் பாலியல் வன்கொடுமை செய்து, கொன்று உடலை எரித்து உள்ளனர்.

நாட்டில் பெண்கள் இரவில் வெளியே சென்று விட்டு திரும்புவது கேள்விக்குறியான நிலையில், கேரள அரசு திருவனந்தபுரத்தில் ‘இரவு நடை’ என்ற புதிய திட்டத்தினை நேற்றிரவு அறிமுகப்படுத்தியது.

இதில் வயது வித்தியாசமின்றி அனைத்து பெண்களும் ஆர்வமுடன் பங்கேற்றனர். நேர கட்டுப்பாடின்றி பெண்கள் வெளியே செல்லலாம் என்ற தகவலை ‘இரவு நடை’ திட்டம் தெரிவிக்கும் என கேரள பெண் மந்திரி சைலஜா செய்தியாளர்களிடம் தெரிவித்து உள்ளார்.

Advertisements

Leave a Reply