Home செய்திகள் பொங்கல் பரிசு வழங்க மாட்டோம்- தமிழக அரசு உறுதி

பொங்கல் பரிசு வழங்க மாட்டோம்- தமிழக அரசு உறுதி

152
0

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்பு பதவிகளுக்கு வருகிற 27 மற்றும் 30-ந் தேதிகளில் தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் முடிவடைந்து இன்று இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாக உள்ளது.

இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் நல்லமன்னார்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் சுப்புலட்சுமி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியுள்ளதாவது:

நான், நல்லமன்னார்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறேன். பொங்கல் பரிசு மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்கம் வழங்கப்படும் என்ற அரசின் அறிவிப்பால் எனது வெற்றி பாதிக்கப்படும். இதனால், தேர்தல் நடக்கும் பகுதிகளில் பொங்கல் பரிசு வழங்க தடை விதிக்க வேண்டும் எனக்கூறியிருந்தார்.

இந்நிலையில், தேர்தல் நடக்கும் மாவட்டங்களில் பொங்கல் பரிசு வழங்க அரசுக்கு அனுமதி அளிப்பது பற்றி நாளை முடிவு செய்யப்படும் என மாநில தேர்தல் ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது.

Advertisements

Leave a Reply