Home செய்திகள் ஒரு ஓட்டின் விலை பன்றியின் விலையை விட குறைவு

ஒரு ஓட்டின் விலை பன்றியின் விலையை விட குறைவு

301
0

சமீப காலமாக தமிழகத்தில் ஓட்டுக்காக வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் பழக்கம் அதிகரித்து உள்ளது. பணத்துக்காக தங்கள் வாக்கை விற்பது ஜனநாயக விரோத செயல் என்று தேர்தல் கமிஷன் பல்வேறு விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகிறது.

இதன் காரணமாக அரசியலில் நல்லவர்கள் போட்டியிட நினைத்தாலும் பணம் கொடுத்து வாக்கு பெற முடியாதே என்று நினைத்து பின்வாங்குகின்றனர். தேர்தல் கமிஷனும் ஓட்டுக்கு பணம் கொடுத்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து வருகின்றது.

இந்த நிலையில் தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வருகிற 27-ந்தேதி, 30-ந்தேதி என இரு கட்டமாக நடைபெறுகிறது. இதையொட்டி ஊரக பகுதிகளில் பல்வேறு இடங்களில் பஞ்சாயத்து தலைவர் பதவிகளை ஊர் மக்கள் ஏலம் விடும் சம்பவங்களும் அதிகரித்து உள்ளன. ஜனநாயக நாட்டில் வசதி படைத்தவர் ஒரு குறிப்பிட்ட பணம் கொடுத்தால் அந்த பதவியை அவருக்கு கொடுக்கலாம் என்ற மனநிலைக்கு இன்றைய மக்கள் தள்ளப்பட்டு இருப்பது வேதனையின் உச்சம்.

இந்தநிலையில் ஓட்டுக்கு பணம் கொடுப்பதை விமர்சித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ‘பன்றி விலையை விட, ஓட்டுக்கு விலை குறைவு’ என்றும் தேர்தலில் வாக்குகளை விற்போர்,மற்றும் வாங்குவோர் கவனத்திற்கு என்று தலைப்பிட்டு பல்லடம் அருகே பல்வேறு இடங்களில் கரைப்புதூர் மக்கள் மன்றம் சார்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு உள்ளன.

இந்த சுவரொட்டிகள் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. .

Advertisements

Leave a Reply