Home மற்றவை இன்ஸ்டாகிராமில் 50 மில்லியன் பாலோயர்ஸ் – இந்திய பிரபலம்

இன்ஸ்டாகிராமில் 50 மில்லியன் பாலோயர்ஸ் – இந்திய பிரபலம்

116
0

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, சமூக வலைத்தளங்களில் துடிப்பாக இயங்கி வருகிறார். குறிப்பாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது தான் செல்லும் இடங்களில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

இதனால், இன்ஸ்டாகிராமில் விராட் கோலியை கோடிக்கணக்கானோர் பின் தொடர்கின்றனர். இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து தற்போது, 50 (5 கோடி) மில்லியன் ஆக உள்ளது. இதன் மூலம், இன்ஸ்டாகிராமில் 5 கோடி பின் தொடர்பவர்களை பெற்ற முதல் இந்திய பிரபலம் என்ற பெருமையை விராட் கோலி பெற்றார். 31 வயதான விராட் கோலி, இன்ஸ்டாகிராமில் இதுவரை 930 புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

Advertisements

Leave a Reply