Home சினிமா விஜய் சேதுபதி ஜோடியாக நயன்தாரா-சமந்தா!

விஜய் சேதுபதி ஜோடியாக நயன்தாரா-சமந்தா!

98
0

விஜய் சேதுபதி நடிக்க இருக்கும் படத்தில் நயன்தாரா, சமந்தா ஆகிய இருவரும் ஜோடியாக நடிக்கிறார்கள். விக்னேஷ் சிவன் டைரக்டு செய்கிறார். இவருடைய டைரக்‌ஷனில், நயன்தாரா ஜோடியாக ‘நானும் ரவுடிதான்’ என்ற படத்தில் விஜய் சேதுபதி ஏற்கனவே நடித்து இருக்கிறார்.

அந்த படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து விஜய் சேதுபதி, நயன்தாரா, விக்னேஷ் சிவன் கூட்டணி, மேலும் ஒரு படத்தில் இணைவார்களா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில், இந்த படத்தை பிரமாண்டமான முறையில், லலித்குமார் தயாரிக்கிறார். படப்பிடிப்பு வருகிற மே மாதம் தொடங்குகிறது.

Advertisements

Leave a Reply