Home செய்திகள் உலக செய்திகள் அதிபர் டிரம்ப் – இந்தியா வருகை

அதிபர் டிரம்ப் – இந்தியா வருகை

39
0

கடந்த வாரம் டிரம்ப் மற்றும் இந்திய பிரதமர் மோடி இருவரும் தொலைபேசி வழியே பேசி கொண்டனர். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா டிரம்ப் ஆகிய இருவரும் வருகிற 24 மற்றும் 25 ஆகிய இரு நாட்கள் இந்தியாவில் பயணம் மேற்கொள்கின்றனர் என வெள்ளை மாளிகை வெளியிட்டு உள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த பயணத்தில் புதுடெல்லி மற்றும் குஜராத் ஆகிய பகுதிகளுக்கு இருவரும் செல்கின்றனர். நாட்டு விடுதலைக்காக போராடிய மகாத்மா காந்தி மற்றும் பிரதமர் மோடியின் சொந்த மாநிலம் என்ற வகையில் இவர்களது பயணத்தில் குஜராத் இடம்பெற்றுள்ளது.

அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கு இடையேயான நல்லுறவை வலுப்படுத்துவதற்காக இந்த பயணம் அமையும் என்றும் அதில் தெரிவித்து உள்ளது.

Advertisements

Leave a Reply