கடவுளால் படைக்கப்படும் மனித பிறவி என்பது நிரந்தரமற்ற ஒன்று. மனிதனுக்கு ஏழு ஜென்மம் என்பார்கள். ஆனால் இப்போது இருக்கும் அறிவியல் உலகில் இதை யாரும் நம்புவதாக இல்லை. சிலர் எப்பா சாமி இந்த ஒரு மனித ஜென்மமே போதும் என்கிறார்கள்.
ஆனால் இந்த ஒரு ஜென்மத்தில் ஜமாலுதீன் போன்ற நபர்கள் படும்பாடும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. ஒரு மனிதனுக்கு ஒரு உறுப்பு தவறான திசையில் இருந்தால் பரவாயில்லை. ஆனால் ஜமாலுதீன் -க்கு இதயம் உட்பட அனைத்து உடல் உள் உறுப்புகளும் தலைகீழாக வேறு வேறு திசையில் அமைந்துள்ளது. இத்தனை ஆண்டுகள் இதுப்பற்றி தெரியாமலே அவர் வாழ்த்து வந்துள்ளார்.
உத்தர பிரதேசத்தில் குஷிநகரில் உள்ள பத்ரனா கிராமத்தில் வசிக்கும் 43 வயதாகும் ஜமாலுதீன்- க்கு அண்மையில் தொடர்து வயிற்று வலி ஏற்பட்டது. இதனால் அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு சென்றார்.அப்போது அவரின் உடலை எக்ஸ்ரே மற்றும் அல்ட்ரா சவுண்ட் செய்து பார்த்த மருத்துவர்களுக்கு காத்திருந்தது பேரதிர்ச்சி.
பொதுவாக அனைத்து மனிதர்களுக்கும் இதயம் இடது புறத்திலும் கல்லீரல், பித்தப்பை வலது புறத்திலும் இருக்கும்.ஆனால் ஜமாலுதினுக்கு கல்லீரல் மற்றும் பித்தப்பை இடது புறத்தில் இருக்கிறது. இதயம் வலது பக்கத்தில் உள்ளது. இதனைப்பார்த்த மருத்துவர்கள் உடனடியாக அவரை அழைத்து பேசினர். அதுவரை தனது உடலில் இப்படி ஒரு மாற்றம் இருப்பது ஜமாலுதீனுக்கு தெரியாது. இதனைக்கேட்டு கவலையில் மூழ்கினார் ஜமாலுதீன்.
அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் சஷிகாந்த் தீட்சித்திடம் இதுக் குறித்த சந்தேகத்திற்காக உத்திரப்பிரதேச மருத்துவர்கள் நாடினர். அப்போது பேசிய அவர், “ ஜமாலுதீன் பித்தப்பை இடது பக்கத்தில் அமைந்திருப்பதால் அவரின் பித்தப்பையில் இருக்கும் கற்களை நீக்குவது கடினம்.அனைத்து உடல் உறுப்புகளும் தவறான பக்கத்தில் இடம்பெற்றிருப்பது இதுவே முதல்முறை. இப்படியான நபர்களுக்கு சிகிச்சை அளிப்பது மிகவும் சிரமம்.
பித்தப்பையில் கற்களை அகற்ற 3டி லேபராஸ்கோபிக் இயந்திரங்கள் தேவை” என்று தெரிவித்துள்ளார்.