Home மற்றவை முத்தத்தின் பிரத்யேக அர்த்தங்கள்

முத்தத்தின் பிரத்யேக அர்த்தங்கள்

235
0

முத்தம் எப்படிக் கொடுக்க வேண்டும் என்று முறைகள் இருப்பதைப்போல, முத்தம் எங்கு கொடுக்கப்படுகிறதோ அதற்கென சில அர்த்தங்களும் உள்ளன.

கன்னம் – ஒருவர் உங்களுக்குக் கன்னத்தில் முத்தம் கொடுத்தால் அவர் உங்களிடம் நட்புடன் இருக்க விரும்புகிறார் என்று அர்த்தம்.

கண் – காதலில் கண்களில் கொடுக்கப்படும் முத்தத்துக்கு நான் எப்போதும் உன்னுடன் இருக்க விரும்புகிறேன் என்று பொருள்.

கை – கைகளில் முத்தம் கொடுப்பது மரியாதைக்குரிய ஒரு செயலாகப் பார்க்கப்படுகிறது. யார் உங்களுக்கு கைகளில் முத்தம் கொடுக்கிறார்களோ அவர்கள் உங்கள் மேல் மிகுந்த மரியாதை வைத்துள்ளவர்கள்.

கழுத்து – தன் இணையை இழுத்து அணைத்து கழுத்தில் தரும் முத்தம் ரொம்பவே ரொமான்டிக்கானது. கழுத்தில் முத்தம் கொடுத்தால் ‘நீ எனக்கு வேண்டும்’ என்று அர்த்தம்.

மூக்கு – உங்கள் காதலர் கன்னத்தோடு கன்னம் உரசி உங்கள் மூக்கின் மேல் பதிக்கும் முத்தத்துக்கு `உன்னைவிட அழகு வேறு யாருமில்லை’ என்று பொருள்.

நெற்றி – ஆயிரம் வார்த்தைகள் தராத ஆறுதலை ஒரு நெற்றி முத்தம் தந்துவிடும். உங்கள் இணை உங்களுக்கு நெற்றியில் முத்தம் கொடுத்தால் அதற்கு, `நான் வாழ்நாள் முழுவதும் உனக்குத் துணையாக இருப்பேன்’ என்று அர்த்தம்.

உதடு – உதட்டு முத்தம் ரொம்பவே உணர்ச்சிகரமானது. உங்கள் காதலர் உதட்டில் முத்தம் தந்தால் அவர் தன் உயிருக்கும் மேலாக உங்களை நேசிக்கிறார் என்று அர்த்தம்.

அதுபோல் முத்தம் தரும்போது உங்கள் காதலர் கண்களை மூடிக்கொண்டால், முத்த தருணத்தை அவர் ஆழ்ந்து ரசிக்கிறார் என்றும், கண்களைத் திறந்திருந்தால் உங்கள் உணர்வுகளின் வெளிப்பாட்டையும் வெட்கத்தையும் ரசிக்கிறார் என்றும் அர்த்தம்.

முத்தத்தில் இவ்வளவு உள்ளர்த்தங்கள் பொதிந்துள்ளன. மேலும் ஒரு முத்தத்தில் குறைந்தது 12 கலோரிகள் எரிக்கப்படுகின்றன. முத்தம் கொடுப்பதன் மூலம் தலைவலி, மன அழுத்தம் குறையும். உடல் ரிலாக்ஸ் ஆகும். தொடர்ந்து 1 நிமிடத்துக்கு மேல் முத்தம் கொடுக்கும்போது 26 கலோரிகள் எரிக்கப்படுகின்றன. இன்ப உணர்ச்சிகளுக்குக் காரணமான ஹார்மோன்களின் சுரப்பும் அதிகமாகும்.

முத்தம் கொடுத்துக்கொள்ளும்போது மனஅழுத்தம் குறையும். உதடு, கழுத்து போன்றவற்றில் கொடுக்கப்படும் முத்தங்கள் ரொம்பவே உணர்ச்சிகரமானவை. எனவே, காதலை நம்பிக்கையோடு அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்வதில் முத்தத்தின் பங்கு முக்கியமானது

Advertisements

Leave a Reply