மேஷம்
முடிந்த அளவு இன்று வாகனங்களில் செல்வதை தவிர்த்து விடுங்கள். கருத்து வேறுபாடு காரணமாக தவறான புரிந்துணர்வு காணப்படும். உங்கள் துணையின் கருத்துக்களை புரிந்து கொண்டு இருவரும் பரஸ்பரம் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டியது அவசியம்.
ரிஷபம்
விரைவில் நல்ல முன்னேற்றங்களை காண்பீர்கள். ஆனால், அவசப்பட வேண்டாம். கிடைக்கும் வாய்ப்புகளை தவற விடாதீர்கள். உடல் ஆரோக்யத்தில் அக்கறை தேவை.
மிதுனம்
வெளிநாடு செல்வதற்கான வாய்ப்பு உருவாகும் சூழல் உள்ளது. பண விவகாரங்களில் ஒருமுறைக்கு பல முறை யோசித்து முடிவெடுங்கள். புதிய வாகனம் வாங்குவீர்கள். பயனுள்ள நாள்.
கடகம்
எவ்வளவு உழைத்தாலும், உரிய பாராட்டு கிடைக்கவில்லையே என்று கவலைப்பட வேண்டாம். பாராட்டு இல்லையென்றாலும், தனிப்பட்ட உங்களின் வளர்ச்சி முன்னேற்றம் பெறும். கடவுள் வழிபாடு அவசியம்.
சிம்மம்
சமூகம் சார்ந்த பிரச்சனைகளில் அதிகம் ஈடுபடுவீர்கள். திருமண நிகழ்வு விரைவில் அரங்கேற வாய்ப்புள்ளது. விநாயகர் வழிபாட்டுடன் இந்த நாளை தொடங்குங்கள். வெற்றி உறுதி.
கன்னி
இரும்பு தொழில் ஈடுபடுவோருக்கு நல்ல வருமானம் கிடைக்கும் நாள் இது. உங்களின் சேமிப்பு கணிசமாக உயரும். மாணவர்களுக்கு படிப்பின் மீது ஆர்வம் ஏற்படும், வெற்றிகரமான நாள்.
துலாம்
சரியான திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் உங்களிடம் காணப்படும். உங்கள் பணிகளை குறித்தநேரத்தில் முடிக்க செயலாற்றுவீர்கள். நீங்கள் தொழில் சார்ந்த அணுகுமுறை மேற்கொள்வீர்கள். இது உங்களுக்கு மிகுந்த பலனளிக்கும்.
விருச்சிகம்
பண வரவு இருக்கும். வசூலாகாத கடன் தொகை திரும்பக் கிடைக்கும். நல்ல மனிதர்களை தேடிக் கொண்டிருப்பீர்கள். அவர்கள் உங்கள் அருகில் தான் உள்ளார்கள். காதலர்களுக்கு இனிமையான நாள்.
தனுசு
கிடைக்கும் கேப்பில் கோல் அடிப்பீர்கள். மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். நண்பர்களின் ஆதரவு உங்களுக்கு தான். உடல் நலனில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மகிழ்ச்சியான நாள் இது.
மகரம்
உடல் ஆரோக்யத்தில் முன்னேற்றம் இருக்கும். பிரச்சனைகளில் இருந்து வெளியேற, பெற்றோர்கள் துணை புரிவார்கள். திருமணம் நடக்காமல் இருப்பவர்களுக்கு விரைவில் நல்ல செய்தி கிடைக்கும்.
கும்பம்
மன அழுத்தத்துடன் காணப்படுவீர்கள். குடும்பம் எவ்வளவு முக்கியம் என்பதை உணரும் நேரம் இது. ஆனால், தவறுகளை உடனுக்குடன் சரி செய்து கொள்ளும் ஆற்றல் இருப்பதால், பிழைத்துக் கொள்வீர்கள்.
மீனம்
கற்பனையில் மிதப்பதை கொஞ்சம் நிறுத்தி வையுங்கள். பிஸ்னஸ் செய்கிறீர்கள் என்றால், மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குழந்தை பராமரிப்பில் பெரியோர்களின் ஆலோசனைப்படி செயல்படுங்கள்.