Home ஜோதிடம் இன்றைய ராசிபலன் – 21.02.2020

இன்றைய ராசிபலன் – 21.02.2020

159
0

மேஷம்
மகிழ்ச்சியான நாள். பிரியமானவர்களுடன் அன்யோன்யம் அதிகரிக்கும். நிதி விவகாரங்களில் சாதகமான நிலை நிலவும். கடனுதவிகள் கிடைக்கும்.

ரிஷபம்
எதிர்கால வாழ்விற்காக திட்டமிடுவீர்கள். மகிழ்ச்சியான செய்தி, வாயிற்கதவை தட்டும். புதிய பொறுப்புகளை ஏற்பீர்கள். மகிழ்ச்சியான நாள்.

மிதுனம்
முக்கிய முடிவுகளை இன்று எடுப்பதை தவிர்த்தல் நலம். உங்களின் வார்த்தைகளை மற்றவர்கள் உதாசீனப்படுத்துவார்கள் என்பதால் அவர்களிடத்தில் இருந்து விலகி இருத்தல் நல்லது. பயணத்திற்கு திட்டமிடுவீர்கள்.

கடகம்
கிரகங்களின் சாதகமான பார்வையினால் நற்பலன்களை பெறுவீர்கள். நட்பு பாராட்டுவீர்கள். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். விருந்து விசேஷங்களில் பங்கேற்று மகிழ்வீர்கள்.

சிம்மம்
காதலின் மகத்துவத்தை உணர்வீர்கள். பார்க்கும் எல்லாரையும் நட்பு பாராட்டுவீர்கள். இன்றைய நாள் போலவே எல்லா நாளும் அமைந்துவிடாதா என்று நினைப்பீர்கள்.

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)

புதுப்புது அனுபவங்களை பெறுவீர்கள். பிரியமானவர்களுடன் அந்தரங்க விஷயங்களை பகிர்வீர்கள். உணவு பழக்கவழக்கங்களில் நிதானம் மேற்கொள்வது நல்லது.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)

மற்றவர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற பிரயத்தனம் மேற்கொள்வீர்கள். சவால்களை ஏற்க தயங்கமாட்டீர்கள். விழிப்புடன் இருந்தால் விரயத்தை தவிர்க்கலாம்.

விருச்சிகம்
தொழில்முறை விவகாரங்களில் அசட்டையை தவிர்த்தல் நலம். மற்றவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவீர்கள். பிரியமானவர்கள் தங்களை தவறாக எண்ண வாய்ப்பிருப்பதால் கவனம்.

தனுசு
புது சவால்களை ஏற்று அதில் வெற்றியும் பெறுவீர்கள். எதிர்காலத்தை பற்றிய சிந்தனை மேலோங்கும். பொதுநல விஷயங்களில் அதிக அக்கறை செலுத்துவீர்கள்.

மகரம்
பழைய நினைவுகளை அசைபோடுவீர்கள். நிதிவிவகாரங்கள், சிக்கலை ஏற்படுத்தும் என்பதால் கவனம் தேவை. அறிவார்ந்த நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும்.

கும்பம்
உற்றார் உறவினர்களுடன் இருந்தபோதிலும், தனிமையாக இருப்பதுபோன்ற மனநிலை ஏற்படும். மனசஞ்சலம் அதிகம் ஏற்படும் என்பதால், தனிமையை தவிர்த்தல் நலம். பின்விளைவுகளை அறிந்து செயல்களில் ஈடுபடுவது நல்லது.

மீனம்
கற்பனைக்குதிரையை தட்டிவிடுவீர்கள். கனவுகளால் உற்சாகம் பெறுவீர்கள். பயணங்களுக்கு திட்டமிடுவீர்கள். வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு என்ற ரீதியிலேயே உங்களது நடவடிக்கைகள் இருக்கும்.

Advertisements

Leave a Reply