Home ஜோதிடம் இன்றைய ராசிபலன் – 19.02.2020

இன்றைய ராசிபலன் – 19.02.2020

57
0

மேஷம்
தலைமைப்பொறுப்பு தேடி வரும் நாள். மற்றவர்களின் எண்ண ஓட்டங்களையும் அறிந்து உத்தரவுகளை பிறப்பிப்பது உறவில் விரிசல் ஏற்படாமல் காக்கும். நினைத்த காரியங்கள் நினைத்தது போன்று நடக்கும். மகிழ்ச்சியான நாள்.

ரிஷபம்
நிதி விவகாரங்களில் அசட்டையை தவிர்ப்பதனால், விரயத்தை தடுக்கலாம். அறிவார்ந்த நபர்களின் தொடர்பு கிடைக்கும். அவர்களின் அறிவுரையின்படி நடக்க முயல்வீர்கள்.

மிதுனம்
அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதில் ஆர்வம் காட்டுவீர்கள். குழந்தைகள் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களிடம் அதிக அன்பு செலுத்துவீர்கள். பிடிக்காத விஷயங்களை செய்ய தயங்குவீர்கள்.

கடகம்
பழைய அனுபவங்களிலிருந்து நிறைய விஷயங்களை கற்றுக்கொள்வீர்கள். திறமைகளை வளர்த்துக்கொள்ள பிரயத்தனம் மேற்கொள்வீர்கள். கணவன் – மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். மகிழ்ச்சியான நாள்.

சிம்மம்
நீண்ட நாளாக மனதை உறுத்திவந்த விவகாரங்களில் இருந்து விடுதலை பெறுவீர்கள். மற்றவர்களை வழிநடத்துவீர்கள். ஆதரவுக்கரம் நீட்டுவதனால், மற்றவர்களின் அன்புக்கு பாத்திரமாவீர்கள்.

கன்னி
பிடிக்காத விஷயங்களால் அவதிப்பட்டு வந்த நீங்கள், இனி அதிலிருந்து விடுபடுவீர்கள். ஓய்வை விரும்புவீர்கள். மற்றவர்களை கட்டுப்படுத்த விரும்ப மாட்டீர்கள்.

துலாம்
கிரகங்களின் சாதகமான பார்வையினால், நினைத்த காரியங்கள் எண்ணியபடியே ஈடேறும். செயல்களில் நேர்த்தி நிறைந்திருக்கும். எதிர்பாராத பணவரவு உண்டு. எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

விருச்சிகம்
மனம் மகிழ்ச்சியாக உணர்வீர்கள். மற்றவர்களுடன் ரகசியங்களை பரிமாறிக்கொள்வீர்கள். உங்களின் நன்னடத்தைக்கு தக்க பிரதிபலனை பெறுவீர்கள். நண்பர்களுக்காக தியாகம் செய்ய தயங்க மாட்டீர்கள்.

தனுசு
கிரகங்கள் சாதகமான நிலையில் இல்லாததால், வார்த்தைகள் மற்றும் செயல்களில் நிதானம் அவசியம். மற்றவர்களுக்காக பொறுப்புகளை ஏற்காமல் இருப்பது நல்லது.ரகசியம் பாதுகாப்பது உத்தமம்.

மகரம்
நிதி, தொழில் விவகாரங்களில் ஏற்றமான நாள். இலக்குகளை அடைந்து அதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள். எது சரி எது தவறு என்பதை உணர்ந்து செயல்படுவீர்கள். தவறுக்கு மற்றொரு தவறு சரியாகிவிடாது என்பதை உணர்வீர்கள்.

கும்பம்
பிரியமானவர்களால் மகிழ்ச்சியான செய்தி கிட்டும். அவருடன் அதிக நேரத்தை செலவழிப்பீர்கள். விருந்து விசேஷங்களில் பங்கேற்பதால் மனம் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

மீனம்
பெரியோர்களின் அறிவுரைகளை கேட்டு நடப்பது நல்லது. கணவன்- மனைவி இடையே பிணக்கு ஏற்படும். செயல்களில் கவனம் செலுத்துவது நல்லது. தியானம் மேற்கொள்வது நல்லது.

Advertisements

Leave a Reply