Home ஜோதிடம் இன்றைய ராசிபலன் – 18.02.2020

இன்றைய ராசிபலன் – 18.02.2020

171
0

மேஷம்
பிரியமானவர்களுக்காக அதிகநேரம் செலவிடுவீர்கள். நேர்கொண்ட பார்வையாக இருப்பீர்கள். மற்றவர்களால் பாராட்டப்படுவீர்கள். பின்விளைவுகளை அறிந்து செயல்களில் ஈடுபடுவீர்கள்.

ரிஷபம்
செயல்களை மாற்றிச்செய்வதனால், வழக்கமான பணிகளிலிருந்து விலகிச்செல்வீர்கள். மற்றவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளிப்பீர்கள். எதிலும் சமரசம் செய்துகொள்ள மாட்டீர்கள்.

மிதுனம்
வாழ்க்கைப்பயணம் மேடு பள்ளங்கள் நிறைந்தது என்பதை மறந்துவிட வேண்டாம். ஓய்வு தேவைப்படும் நாள். புதுவிதமான முயற்சிகளால் மனதில் உத்வேகம் நிறைந்திருக்கும். செயல்களில் நேர்த்தி நிறைந்திருக்கும்.

கடகம்
குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றுவதில் ஆர்வம் காட்டுவீர்கள். நீங்கள் நினைப்பதுபோன்று மற்றவர்கள் நடந்துகொள்ளவேண்டும் என்ற எண்ணத்தை மறந்துவிடுங்கள். எதிர்பார்ப்புகள் ஏமாற்றம் அளிக்கலாம் என்பதால் கவனம்.

சிம்மம்
கிரகங்களின் சாதகமான பார்வையினால் நினைத்த காரியங்கள் எண்ணியவாறு ஈடேறும். உலகம் பிறந்தது எனக்காக என்ற எண்ணம் ஏற்படும். பெரியோர்களின் அறிவுரைகளை கேட்டு நடப்பீர்கள். அசதியால் அவதிப்படுவீர்கள்.

கன்னி
மறதியால் அவதிப்படுவீர்கள். கணவன் – மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். எதிர்கால வாழ்க்கைக்காக திட்டமிடுவீர்கள். மனசஞ்சலம் அதிகரிக்கும் என்பதால் வார்த்தைகளில் கவனம் அவசியம்.

துலாம்
பொதுநல விஷயங்களில் அதிக ஈடுபாடு காட்டுவீர்கள். நிதி, தொழில் சார்ந்த விவகாரங்களில் அதிக விழிப்புணர்வுடன் செயல்படுவது அவசியம். விருந்து, விசேஷங்களில் கலந்துகொள்வதால் மனம் மகிழ்ச்சியாக உணர்வீர்கள்.

விருச்சிகம்
தலைமைப்பொறுப்பு ஏற்பீர்கள். ஆதாயம் வரும் நாள். பிரியமானவர்களுடன் நேரத்தை செலவழிப்பீர்கள். வாகன போக்குவரத்தில் கவனம் தேவை.

தனுசு
மகிழ்ச்சியான நாள். செயல்களில் முன்னேற்றம் நிலவும். நிதி, தொழில் விவகாரங்களில் திருப்தி நிலை ஏற்படும்.

மகரம்
அதிர்ஷ்டகரமான நாள். விரயத்தை தவிர்க்க அதிக விழிப்புணர்வு காட்டுவது நல்லது. அகலக்கால் வைக்காமல் இருப்பது சாலச்சிறந்தது. மன அமைதிக்கு தியானம் மேற்கொள்வது நல்லது.

கும்பம்
மற்றவர்களின் குற்றச்சாட்டுகளை பெரிதுபடுத்தாதீர்கள். முன்னர் செய்த செயல்களுக்கு பலன் பெறுவீர்கள். கொடுத்த வார்த்தையை காப்பாற்ற அதிக பிரயத்தனம் மேற்கொள்வீர்கள்.

மீனம்
உங்களின் வார்த்தைகளுக்கு அங்கீகாரம் கிடைக்கும். கணவன் -மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். முயற்சி திருவினையாக்கும் என்பதை மறக்கவேண்டாம்.

Advertisements

Leave a Reply