Home ஜோதிடம் இன்றைய ராசிபலன் – 13.02.2020

இன்றைய ராசிபலன் – 13.02.2020

176
0

மேஷம்
குடும்ப நண்பர்களுக்கு தித்திப்பான நாள். மனைவியுடன் நெருக்கம் அதிகரிக்கும். முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாள். அவற்றின் மூலம் லாபகரமான பலன் கிடைக்கும். நீங்கள் இன்று நம்பிக்கை உணர்வுடன் காணப்படுவீர்கள்.

ரிஷபம்
உங்கள் இலக்குகளை அடைய இந்த நாள் அனுகூலமாக இருக்காது. அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் உங்களை வைத்திருப்பது நல்லது. இன்று திறமையாக செயலாற்ற அனுசரணையான அணுகுமுறை தேவை. நிதிநிலைமை அபாரமாக இருக்கும். கூடுதல் செலவுகள் காணப்படும். இது உங்களுக்கு அதிருப்தி அளிக்கும்.

மிதுனம்
கடவுள் வழிபாடும் அவசியம். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். நீண்ட கால ரகசியங்கள் வெளிப்படும். குறுகிய மனப்பான்மை கொண்ட நபர்களை சந்திக்க நேரிடும். சுமாரான நாளாக இருக்கும்.

கடகம்
காது தொடர்பான மருத்துவ செலவு ஏற்பட வாய்ப்புள்ளது. பெற்றோர்களின் ஆலோசனை கேட்டு முடிவெடுங்கள். மேம்போக்கான சிந்தனைகளை மாற்றிக் கொண்டால் உங்களுக்கு நல்லது.

சிம்மம்
அனுபவமே உங்களுக்கு பாடம். அதை நியாயமாக கற்றுக் கொள்ள விரும்புவீர்கள். சிறு சிறு விஷயங்களுக்கு எல்லாம் ரியாக்ட் செய்ய வேண்டாம். காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள முயற்சி செய்யுங்கள்.

கன்னி
உங்கள் கால் பூமியில் படும்படி நடந்து கொண்டால் நல்லது. கோவிலுக்கு சென்றால், பூசாரியின் கால்களில் விழுந்து வணங்குங்கள், அது உங்கள் பூர்வ கர்மாவை கழிக்கும்.

துலாம்
துணிச்சலாக அனைத்து விஷயங்களையும் எதிர்கொண்டு வரும் நீங்கள், உங்கள் சொந்த விஷயத்தில் கோட்டை விடுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்களை பணிய வைப்பார்கள். மாணவர்களின் கல்வித் தரம் உயரும்.

விருச்சிகம்
கடன் தொல்லைகள் நீங்கும். உண்மையுடன், நேர்மையாக செயல்படுவீர்கள். பணியிடத்தல் செல்வாக்குடன் வலம் வருவீர்கள். அதில் சில இம்சைகளும் உங்களை வலம் வரும். வெற்றிகரமான நாள்.

தனுசு
குடும்ப உறவில் மகிழ்ச்சி நீடிக்கும். இதனால், நீண்ட காலம் மனதில் இருந்த ரணம் குறையும். சில ஆச்சர்யமான அதிர்ச்சிகள் உங்களுக்கு கிடைக்கும். குடும்பத்தை முன்னேற்ற பாதைக்கு அழைத்துச் செல்வீர்கள்.

மகரம்
பிள்ளைகளின் நலனில் அக்கறை தேவை. அதற்காக அதிகளவு கடன் வாங்க வேண்டிய அவசியமில்லை. அது உங்களை பேராபத்தில் கொண்டு போய் நிறுத்தும். சரியான நேரத்தில் சரியான வார்த்தைகள் உபயோகப்படுத்த வேண்டிய நாள் இது.

கும்பம்
புதிய வாழ்க்கைக்கான நல்ல அடித்தளம் போடுவீர்கள். மகிழ்ச்சியான நாள். முன்பு உங்களை உதாசீனம்படுத்தியவர்கள் இப்போது உங்களை ஆராதிப்பார்கள். அதனை நம்ப வேண்டாம். உண்மை எது, பொய் எது என்பதை பிரித்து பழக முயற்சி செய்யுங்கள்.

மீனம்
வேலை உடனடியாக முடிக்க வேண்டும் என்பதற்காக மாற்று வழிகளை தேர்வு செய்வீர்கள். அது நல்லதிலும் போய் முடியலாம், தோல்வியிலும் முடியலாம். பிரச்சனைகளை பேசித் தீர்க்க வேண்டிய நேரமிது.

Advertisements

Leave a Reply