Home ஜோதிடம் இன்றைய ராசிபலன் – 05.02.2020

இன்றைய ராசிபலன் – 05.02.2020

194
0

மேஷம்
மகிழ்ச்சியான நாள். சாகச முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். மதம்சார்ந்த விவகாரங்களில் அதிக ஈடுபாடு ஏற்படும். விருந்து, விசேஷங்களில் பங்கேற்பீர்கள்.

ரிஷபம்
மற்றவர்களின் அறிவுரைகளை காது கொடுத்து கேட்பதால் ஒன்றும் குறைந்துபோய்விட மாட்டீர்கள். மற்றவர்களின் ஆலோசனைகள், தக்க நேரத்தில் கைகொடுக்கும். பின்விளைவுகளை ஆராய்ந்து முயற்சிகளில் ஈடுபடுவது நல்லது.

மிதுனம்
மற்றவர்களுடன் விவாதிப்பதனால் மனதில் இருந்துவந்த குறைகள் அகலும். கருத்துகளில் வேறுபாடுகள் இருப்பின் அதை உடனே களைவது நல்லது. வளைந்து கொடுத்து செல்வது நல்லது.

கடகம்
பொறுப்புகளை தட்டுக்கழிப்பது தவறானது என்பதை உணர்வீர்கள். அதிக வேலைப்பளுவால் சிலவற்றை பிறகு பார்த்துகொள்ளலாம் என்று ஒதுக்குவீர்கள். மற்றவர்களுக்கு உதவி செய்வதனால் மகிழ்ச்சி அடைவீர்கள்.

சிம்மம்
குழந்தைகளுடன் இருப்பதே வாழ்க்கையின் மகிழ்ச்சியான தருணமாக கருதுவீர்கள். அவர்களின் தேவைகளை நிறைவேற்றி மகிழ்வீர்கள். இளைய தலைமுறையினருக்கு போதிய அறிவுரைகளை வழங்குவீர்கள். அவர்களிடமிருந்து சில விஷயங்களையும் கற்றுக்கொள்வீர்கள்.

கன்னி
கிரகங்களின் சாதகமான பார்வையினால், வீடு மற்றும் தொழில் விவகாரங்களில் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். யார் என்ன சொன்னாலும், முடிவு எடுப்பது நீங்கள் மட்டுமே என்பதை எத்தருணத்திலும் மறந்துவிடமுடியாது. சுய தேவைகளை நிறைவேற்றிக்கொள்வீர்கள்.

துலாம்
புதன் மற்றும் நெப்டியுன் கிரகங்களின் பார்வையினால், பிரியமானவர்களிடையே அன்பு, அன்யோன்யம் அதிகரிக்கும். எதிர்பாராத நிகழ்வுகளால், புது உத்வேகம் பெறுவீர்கள். மகிழ்ச்சியான நாள்.

விருச்சிகம்
எது சரி எது தவறு என்பதை பகுத்தாராய்வீர்கள். பின்விளைவுகளை அறிந்து செயல்களில் ஈடுபடுவீர்கள். கடுஞ்சொற்களை தவிர்த்தல் நல்லது. உங்களுடைய பிரச்னைகளை பிறர் புரிந்துகொள்வதில்லையே என்று புலம்புவீர்கள்.

தனுசு
தனிமை உணர்வுடன் இருப்பதாக உணர்வீர்கள். உங்களுடைய நற்செயல்களால், பிறரிடம் நன்மதிப்பு பெறுவீர்கள். மற்றவர்களால் அங்கீகரிக்கப்படுவீர்கள். பொழுதுபோக்கு விவகாரங்களில் அதிக நாட்டம் கொள்வீர்கள்.

மகரம்
என்ன செய்தோம் என்பதைவிட என்ன செய்யப்போகிறோம் என்பதில் அடங்கியிருப்பதே வாழ்க்கை.. ரகசியம் பெரும்பாலான இடங்களில் தேவைப்படுவதுதான் என்பதை உணர்வீர்கள். நேரம் காலம் வரும்போது அனைத்தும் நன்றாகவே நடந்தேறும் என்பதில் நம்பிக்கை கொள்ளுங்கள்.

கும்பம்
மனம் கிரியேட்டிவாக எதையும் சிந்தித்துக்கொண்டிருக்கும். நேரத்தின் மதிப்பை அறிந்து அதை வீணடிக்க தயக்கம் காட்டுவீர்கள். மற்றவர்களின் கோரிக்கைகளுக்கு செவிமடுப்பீர்கள்.

மீனம்
கற்பனைக்குதிரையை தட்டிவிடுவீர்கள். தான் யார் என்பதை அறிய முற்படுவீர்கள். உங்களது நம்பிக்கைகள் மிக உயரியதாக இருக்கும். பணிபுரியும் இடங்களில் சிறிது எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

Advertisements

Leave a Reply