Home ஜோதிடம் இன்றைய ராசிபலன் – 01.02.2020

இன்றைய ராசிபலன் – 01.02.2020

257
0

மேஷம்
மற்றவர்கள் அவர்களது நம்பிக்கையை உங்கள் மீது திணிப்பார்கள். அதை நீங்கள் செய்ய முடியுமா, முடியாதா என்பது வேறு விஷயம். எப்படியிருந்தாலும், இன்றைய சந்திரன் அமைப்பு உங்களுடைய தேவைகளையும், விருப்பங்களையும் விவரிக்க கூடுதல் வாய்ப்புகளை வழங்கும்.

ரிஷபம்
நிதி நெருக்கடிகளை சமாளித்து, திறம்பட குடும்பத்தை வழிநடத்துவீர்கள். எப்போதும் உங்களை பிஸியாக வைத்திருக்க முயற்சி செய்யுங்கள். உங்களது ஓய்வு நேரங்களில் கூட உங்களது சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்த முயற்சி செய்யுங்கள்.

மிதுனம்
சமீப காலங்களோடு ஒப்பிடுகையில் உணர்வு ரீதியிலான தாக்கங்களை உங்களில் ஏற்படுத்துவதில் சந்திரன் பெரும் பங்கு வகிக்கும். இது உங்களை கூடுதல் பொலிவுடன் வைத்திருக்கும். சிறப்பான தருணங்களை தவறவிட்டு விடாதீர்கள்.

கடகம்
உதவியோ, அக்கறையோ நீங்கள் இப்போது மற்றவர்களிடம் இருந்து எதிர்பார்ப்பீர்கள். உங்களை மற்றவர்கள் தரக்குறைவாக நடத்தினாலும் அந்த தருணங்களை அப்புறப்படுத்துங்கள். ஒருநாள் தவறை உணர்ந்து அவர்களே உங்களை தேடி வருவார்கள்.

சிம்மம்
உங்கள் துணையை அவர்கள் விருப்பபடி அணுக சற்று அனுமதியுங்கள். மற்றவர்களை எ[எப்படி அணுகுவது என்பது குறித்து நீங்கள் தெளிவாக படிக்க வேண்டும். அதுவே மற்றவர்கள் அதை படித்து தெரிந்து வைத்திருப்பார்கள். நீங்கள் தான் தாமதம் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

கன்னி
உங்கள் சூரிய விளக்கப்படம் இந்த தருணத்தில் மிகச் சிறந்த ஒன்றாக அமைகிறது. வாய்ப்புகள் குறித்து கடந்த சில வாரங்களாகவே நாம் பேசி வருகிறோம். சந்திர அமைப்பு உங்களுக்கான முடிவுகளை வரையறுக்கிறது.

துலாம்
துணிச்சலாக அனைத்து விஷயங்களையும் எதிர்கொண்டு வரும் நீங்கள், உங்கள் சொந்த விஷயத்தில் கோட்டை விடுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்களை பணிய வைப்பார்கள். மாணவர்களின் கல்வித் தரம் உயரும்.

விருச்சிகம்
கடன் தொல்லைகள் நீங்கும். உண்மையுடன், நேர்மையாக செயல்படுவீர்கள். பணியிடத்தல் செல்வாக்குடன் வலம் வருவீர்கள். அதில் சில இம்சைகளும் உங்களை வலம் வரும். வெற்றிகரமான நாள்.

தனுசு
குடும்ப உறவில் மகிழ்ச்சி நீடிக்கும். இதனால், நீண்ட காலம் மனதில் இருந்த ரணம் குறையும். சில ஆச்சர்யமான அதிர்ச்சிகள் உங்களுக்கு கிடைக்கும். குடும்பத்தை முன்னேற்ற பாதைக்கு அழைத்துச் செல்வீர்கள்.

மகரம்
பிள்ளைகளின் நலனில் அக்கறை தேவை. அதற்காக அதிகளவு கடன் வாங்க வேண்டிய அவசியமில்லை. அது உங்களை பேராபத்தில் கொண்டு போய் நிறுத்தும். சரியான நேரத்தில் சரியான வார்த்தைகள் உபயோகப்படுத்த வேண்டிய நாள் இது.

கும்பம்
புதிய வாழ்க்கைக்கான நல்ல அடித்தளம் போடுவீர்கள். மகிழ்ச்சியான நாள். முன்பு உங்களை உதாசீனம்படுத்தியவர்கள் இப்போது உங்களை ஆராதிப்பார்கள். அதனை நம்ப வேண்டாம். உண்மை எது, பொய் எது என்பதை பிரித்து பழக முயற்சி செய்யுங்கள்.

மீனம்
கடுமையான வாதங்களை முன் வைக்க வேண்டாம், அது உங்களுக்கே எதிராக கூட முடியலாம். சில விஷயங்களில் குடும்பத்தினாரிடம் அக்கறை காட்டுங்கள். அது உங்களில் பாஸிட்டிவ் எனர்ஜியை உருவாக்கும்.

Advertisements

Leave a Reply