Home ஜோதிடம் இன்றைய ராசிபலன் – 30.01.2020

இன்றைய ராசிபலன் – 30.01.2020

235
0

மேஷம்
எவ்வளவு கடுமையாக உழைத்தாலும் உங்களால் கடந்த கால வாழ்க்கைக்கு திரும்ப போக முடியாது. உங்கள் உறவினர்கள் பழைய விவாதங்களை மறு ஆக்கம் செய்வதில் முனைப்பு காட்டுவார்கள். காலாவதியான சில புகார்களை மீண்டும் கிளறுவதில் அர்த்தமில்லை தானே!.

ரிஷபம்
முதலில் உங்கள் பிரச்சனைகளை சரி செய்து கொள்ள முயலுங்கள். உங்களுக்கான முடிவுகளை சரியாய் எழுத முயற்சி செய்யுங்கள். குறைந்தபட்சம் திருத்தி எழுத முயற்சி செய்யுங்கள்.

மிதுனம்
வானிலை மாற்றங்களுக்கெல்லாம் உங்கள் மூடினை மாற்றிக் கொண்டே இருந்தால் என்ன செய்வது! உங்கள் இலக்குகளை ஆளில்லாத இடங்களுக்கு மாற்றிக் கொள்வது புத்திசாலித்தனம் அல்ல. அதற்கான தேவையும் இங்கு இல்லை. வலியில்லாமல் வெற்றியில்லை என்று சிலர் கூறுவார்கள். ஆனால், அது தவறு என்று நீங்கள் நிரூபணம் செய்வீர்கள்.

கடகம்
உங்களை முட்டாளாக்குவது மிகக் கடினம். மற்றவர்கள் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதையே துல்லியமாக கணித்துவிடுவீர்கள். பிறகு கோபம் எதற்கு? மற்றவர்களின் எண்ணங்களையே நீங்கள் வென்றுவிடுவீர்கள்.

சிம்மம்
உங்கள் எதிர்கால பார்வையை மற்றவர்கள் பகிர மாட்டார்கள் என்பதை புரிந்து கொள்வீர்கள். அனைவரையும் ஒரே குடைக்குள் கொண்டு வர முயற்சிப்பீர்கள். கூட்டமாக இருந்தாலும் சரி, தனியாக இருந்தாலும் சரி உணர்வுப் பூர்வமாக அனைவரிடமும் ஒன்றிப் போவீர்கள்.

கன்னி
நீங்கள் எதிர்பார்த்தவர்கள் உங்களுக்கு குறைவான ஆதரவை வழங்கலாம். நீங்கள் எதிர்பார்க்காத நபர்கள் உங்களுக்கு அதிக ஆதரவை கொடுக்கலாம். உங்கள் பக்கம் யாருமே இல்லையென்றால் கூட, உங்கள் தேவைகளை நீங்களே பூர்த்தி செய்து, முன்னோக்கிச் செல்வீர்கள்.

துலாம்
தனிப்பட்ட பிரச்சனைகளை உங்கள் பணியிடத்தில் கொண்டு வராதீர்கள். அதற்கான எதிர்விளைவுகள் சற்று அதிகமாகவே இருக்கும் உங்கள் பழைய நண்பர்களை சந்திக்கு சூழல் உருவாகும். விடாமல் போராடுவது உங்கள் பலம் என்றாலும் அது உருப்படியான விஷயமாக இருந்தால் ரொம்ப நல்லது.

விருச்சிகம்
முடிவுகள் மற்றும் ஆலோசனை மேற்கொள்வதில் நீங்கள் சிறந்தவர்கள் மட்டுமல்ல, ஆளுமைகள் என்பதை உங்களுக்கு நெருக்கமானவர்கள் உணர்ந்து கொள்வார்கள். முடிவெடுக்க நீண்ட நேரம் ஆகலாம், ஆனால் இறுதியில் சரியான பதிலுடன் வந்து நிற்பீர்கள்.

தனுசு
சரிக்கும், தவறுக்கும் இடையே மெல்லிய கூர்மையான கோடு என்றெல்லாம் ஒன்றுமில்லை. செயல்பாடுக்கு ஏற்ற தருணம் எது என்பதில் தான் உங்கள் கேள்வி அடங்கியிருக்கும். தவறான வார்த்தைகளை எதிரிகளாக இருந்தாலும் உபயோகிக்காதீர்கள். உங்கள் தனிப்பட்ட விவரங்களை முடிந்தளவு பூதாகரம் இல்லாமல் முடிக்க பாருங்கள்.

மகரம்
தனிப்பட்ட உறவுகளில் குழப்பங்களுக்கும், நிச்சயமற்ற தன்மைக்கும் இடமளிக்காதீர்கள். அது தேவையில்லாத சிக்கல்களுக்கு வழிவகுக்கும். வார்த்தைகளை விட மோசமான ஆயுதம் எதுவுமில்லை. சந்திரன் இன்று பல வெற்றிகளை உங்களுக்கு தேடித் தருவார்.

கும்பம்
அதிகாரத்தில் இருக்கும் சிலர் உங்களுக்கு வெற்றியை தேடித் தரலாம். மற்றவர்களுக்கும் கொண்ட பேச நேரம் கொடுக்கலாம். நீங்களாகவே முழுமையாக ஆக்கிரமிப்பது என்பது சரியாக இருக்காது. அவர்களை பேசவிட்டால், அவர்கள் சொல்வதும் சரி என்பதை உணருவீர்கள்.

மீனம்
சில கிரகங்கள் வாழ்க்கையை மேம்படுத்தலாம். அதற்காக மற்றவர்கள் மோசமாக இருக்கமுடியாது. வெள்ளியும், வியாழனும் உங்களை உணர்வுப்பூர்வமாக வைத்திருக்கும். ஆனால், சில கிரகங்கள் நீங்கள் சரியான முடிவுகளை எடுக்க வழிவகுக்கும். உண்மை உங்களுக்கு கசக்கலாம். ஆனால், எதிர்காலத்தில் அதை நீங்கள் புறக்கணிக்க மாட்டீர்கள்.

Advertisements

Leave a Reply