Home ஜோதிடம் இன்றைய ராசிபலன் – 29.01.2020

இன்றைய ராசிபலன் – 29.01.2020

187
0

மேஷம்
உங்கள் பிரச்சனைகளுக்கு மற்றவர்களின் நிர்வாகத்தை குறை கூறுவது என்பது சரியாகாது. எனினும், உங்கள் பிரச்சனைகளுக்கு உங்கள் நட்சத்திரங்களே காரணம். நீங்கள் குறை கூற வேண்டுமெனில், நட்சத்திரங்களை குறை கூறுங்கள். தற்போது உங்களின் நீண்ட ஓட்டத்தில் தடைகளை பதிப்பது அவை தான்.

ரிஷபம்
சில ஆச்சர்யமான நிகழ்வுகளை நீங்கள் எதிர்கொள்ள நேரிடும். ஆனால் அது முடிவில்லா சம்பவங்களாக உருமாறும் என்பதை எச்சரிக்கை தேவை. இன்று நீங்கள் கடைபிடிக்க வேண்டியது அமைதி. உங்கள் எண்ணங்களை பிரதிபலிக்க சில சூழல்கள் அமையும்.

மிதுனம்
உங்கள் பணியிடத்தில் நீங்கள் பெருத்த அமைதி காக்க வேண்டியது அவசியம். பொறுமை காக்க வேண்டிய கட்டங்கள் உங்களை சூழ்ந்துள்ளதால், அதற்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய இடத்தில் இருக்கிறீர்கள். நல்ல விஷயங்களை பகிருங்கள். உங்களுக்கும் அது திரும்பி வந்து சேரும்.

கடகம்
உங்கள் பணியில் இருந்து விலகுவதற்கு வாய்ப்பு கண்டிப்பாக இருக்கிறது. ஆனால், வாய்ப்புகள் கதவு பெரியளவில் இல்லை. நிதி நெருக்கடிகளை சந்திக்க மாட்டீர்கள்.

சிம்மம்
ஆஞ்சநேயர் வழிபாடு நல்லது. அருகில் இருக்கும் ஏதாவது ஒரு ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று வழி பட்டால் சிறப்பு. வேலை தொடர்பாக வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிட்டும்.

கன்னி
இல்லற வாழ்க்கையில் திடீர் இனிப்பு உருவாகும். மாற்றங்களை உணர்வீர்கள். காதலர்களின் நெருக்கம் அதிகரிக்கும். விட்டுக் கொடுத்துச் சென்றால், இன்று போல் ஒரு மகிழ்ச்சியான நாள் கிடையாது.

துலாம்
எலக்ட்ரிக்கல் துறையில் பணி கிடைக்க வாய்ப்புள்ளது. ரயிலில் வெளியூர் செல்ல நேரிடலாம். அது திடீர் பயணமாக அமையும். திருமண தேதி முடிவாக வாய்ப்புள்ளது. இன்பமான நாள்.

விருச்சிகம்
செலவை கட்டுக்குள் கொண்டுவர முயற்சி செய்யுங்கள். வீண் விவாதங்களில் தலை காட்ட வேண்டாம். அது உங்களுக்கே எதிராகக் கூட திரும்ப வாய்ப்புள்ளது. பெண் சுகம் வெறும் மாயை என்பதை உணர்ந்து கொள்வீர்கள்.

தனுசு
அரசியலில் இருப்பவர்களுக்கு நல்ல செய்தி கிட்டும். வாழ்க்கையின் அடுத்தக் கட்டத்திற்கு நகர இது முதல் புள்ளியாக இருக்கலாம். சீரியஸாக முகத்தை வைத்துக் கொண்டு இருப்பதால் யாரும் உங்களை ரசிக்கப் போவதில்லை.

மகரம்
நான் தான் ராஜா என்று நீங்கள் நினைக்கும் வரை உங்கள் பக்கம் வெற்றி வரவே வராது. அவமானங்களை தாங்கிக் கொள்ளும் பக்குவம் வேண்டும். உங்கள் முயற்சிகள் வெற்றிப் பெற இன்றைய நாள் உதவாது என்பதே உண்மை.

கும்பம்
இனிப்பு பலகாரங்களை தவிர்ப்பது நல்லது. அது உங்கள் உடல் நலத்திற்கு இப்போதைக்கு ஆகாது. முடிந்தவரை வீட்டில் செய்த உணவுகளையே சாப்பிட்டால் சிறப்பு. மேலோட்டமான நாள்.

மீனம்
வெற்றி உங்களுக்காக காத்திருக்காது. நீங்கள் தான் அதை நோக்கிச் செல்ல வேண்டும். உங்களது உழைப்பு போதாது. இருப்பினும், பணியிடத்தில் நல்ல பெயர் கிடைக்க வாய்ப்புள்ளது.

Advertisements

Leave a Reply