Home ஜோதிடம் இன்றைய ராசிபலன் – 28.01.2020

இன்றைய ராசிபலன் – 28.01.2020

223
0

மேஷம்
சந்திரன் உங்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டில் இருப்பதால், நீங்கள் எடுக்கும் முடிவுகளில் சாதகமான அம்சங்களை எதிர்பார்க்கலாம். உங்கள் வணிக மற்றும் தொழில் சார்ந்த கற்பனைகள் டாப் கியரில் இருக்கும். ஆகையால் இன்று ஏதாவது ஒரு நேர்காணலோ அல்லது மீட்டிங்கோ அட்டென்ட் செய்தால் வெற்றி உங்களுக்கு நிச்சயம்.

ரிஷபம்
எந்த ஒரு விஷயத்தையும் எவ்வளவு தூரத்துக்கு திரித்து கற்பனை செய்து கொள்கிறீர்கள் என்பதை பொறுத்து இருக்கிறது உங்கள் வெற்றி. உங்கள் நம்பிக்கையை மறு ஆக்கம் செய்ய நீங்கள் இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டும்.

மிதுனம்
கோர்ட் இப்போது உங்கள் பக்கம். மற்றவர்கள் என்ன சொன்னாலும், இப்போது நீங்கள் பதில் சொல்ல வேண்டிய கட்டம் இது. சில வழக்கத்திற்கு மாறான முடிவுகள் உங்கள் தினசரி வாழ்க்கையில் ஆதிக்கம் செலுத்தலாம்.

கடகம்
தனிப்பட்ட விதத்திலும், பணியிடத்திலும் உங்கள் நம்பிக்கை, கனவு மற்றும் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய மிகச் சரியான நாள் இன்று.எப்போதும் நம்மை முன்னேற்றிக் கொள்ள கால அவகாசம் கிடைக்கும். இப்போது அந்த நேரம் உங்களுக்காக.

சிம்மம்
நடப்பவை இனிப்பாக தெரிந்தாலும் நீங்கள் சவாலான சூழலில் உள்ளீர்கள் என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள். உங்கள் உள்ளத்தில் இருந்து தோன்றும் அனைத்தையும் செய்து முடிக்க வேண்டும் என்று நினைத்தால் அது பாதகமாக அமையலாம்.

கன்னி
உங்கள் சக பணியாளர்கள், நண்பர்கள், பெற்றோர்கள் அனைவரும் உங்கள் பேச்சை கேட்பார்கள். உங்கள் கடினமான முயற்சிகளுக்கு பாஸிட்டிவ் விமர்சனங்கள் வந்தாலும் வெற்றி கிடைக்கும் வரை ஓய வேண்டாம். நிதானமான போக்கை கடைபிடியுங்கள்.

துலாம்
உங்கள் ஆட்சி கிரகமான வெள்ளி தற்போது சில பாதகமான நிலையை ஏற்படுத்தலாம். உண்மை எது, பொய் எது என்பதை நீங்கள் தான் சரியாக அலசி புரிந்து கொள்ள வேண்டும். இல்லையெனில், புரிந்து கொள்ளுதலில் பெரும் சிக்கலை சந்திப்பீர்கள்.

விருச்சிகம்
காந்த செவ்வாய் மற்றும் புதன் கிரகம் அதன் வழக்கமான பணிகளை செய்துக் கொண்டிருக்கும். எண்ணங்களுக்கும் செயலுக்கு சில வேறுபாடுகள் உருவாகி அதனால் சில மாறுபாடுகள் ஏற்படலாம். நீங்கள் தான் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். உங்கள் துணையின் கருத்துகளுக்கு மதிப்பளித்து முக்கியத்துவம் கொடுக்கும் பட்சத்தில் நிச்சயம் உங்களுக்கு வெற்றி தான்.

தனுசு
சந்திரன் உங்களுக்கு சாதகமான நிலையை கொடுக்கிறார். ஆகையால் கவலை வேண்டாம். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் கூடுதல் அக்கறையுடன் செயல்படுவது நல்லது. நீங்கள் சரியான திசையில் செல்கிறீர்களா என்பதை மறுபரிசீலனை செய்து கொள்வது நல்லது.

மகரம்
குறை, குற்றம், பழி என்று பல எதிர்ப்புகள் உங்களை நோக்கி வரும். அவையனைத்தையும் தவறு என நிரூபித்து உங்கள் நிலைபாட்டில் உறுதியாக இருந்து, உங்கள் தகுதியை தக்க வைக்க வேண்டிய தருணம் இது. சரியான விவரங்களை கேட்டு, அதன் பிறகு வினையாற்றுங்கள்.

கும்பம்
கவலை ரேகைகளை அழித்தாலும் அது படர்ந்து இருக்கும் நீளம் பெரிது. ஆகையால், சில சிக்கல்களை தொடர்ந்து நீங்கள் சந்திப்பீர்கள். ஒவ்வொரு இடத்திலும் சர்பிரைஸ் காணவும் வாய்ப்புள்ளது. ஆனால் அது மகிழ்ச்சியானதா, கவலையானதா என்பதே சர்பிரைஸ்.

மீனம்
ஒருவர் மீது உணர்வுப்பூர்மான சங்கடங்களால் ஏற்பட்ட பிறகும் நீங்கள் எப்படி ஒரே இடத்தில் தங்கியிருக்க முடியும்? நீண்ட நாட்களுக்கு பிறகு சங்கடங்களை சந்திக்கும் நீங்கள், அதிலிருந்து மெல்ல வெளிவருவீர்கள். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை சிக்கல்களுக்கும் விடைகளை கண்டறிவீர்கள்.

Advertisements

Leave a Reply