Home ஜோதிடம் இன்றைய ராசிபலன் – 24.01.2020

இன்றைய ராசிபலன் – 24.01.2020

160
0

மேஷம்
பழைய சம்பவங்களிலிருந்து பாடம் கற்றுக்கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றுவதில் மனக்குழப்பங்கள் ஏற்படும். உங்களுக்காக மற்றவர்களை மாற்ற முயல்வீர்கள்.

ரிஷபம்
இக்கட்டான தருணங்களில் இருந்து புதிய அனுபவங்களை பெறுவீர்கள். நிதி, தொழில் விவகாரங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பீர்கள். நல்ல காரியங்களுக்காக செலவழிப்பீர்கள்.

மிதுனம்
மகிழ்ச்சியான நாள். விருந்து, விசேஷங்களில் பங்கேற்பதால் மனம் மகிழ்ச்சிகரமாக இருக்கும். பிரியமானவர்களுடன் பொழுதை கழிப்பீர்கள்.

கடகம்
கிரகங்களின் சாதகமான பார்வையினால் எண்ணிய காரியங்கள் நினைத்தபடி ஈடேறும். நேர்மறை எண்ணத்துடன் பல்வேறு செயல்களை அணுகுவதினால், வெற்றி கிடைக்கும். பிரிந்து போன சொந்தங்கள் நட்பு பாராட்டுவர்.

சிம்மம்
கிரியேட்டிவாக சிந்தித்து பல செயல்களை அசாத்தியமாக செய்து முடிப்பீர்கள். உங்கள் திறமைகள் வெளிப்படும். தவறோ சரியோ ஒரு கை பார்த்துவிடலாம் என்று துணிந்து செயல்படுவீர்கள்.

கன்னி
எதிர்கால வாழ்க்கைக்காக திட்டமிட்டு செயல்படுவீர்கள். மாற்றத்தை தன்னிடமிருந்தே துவங்குவீர்கள். தவறான பழக்கங்களிலிருந்து விடுபடுவீர்கள்.

துலாம்
திட்டமிட்ட செயல்பாடுகளால் வெற்றி நிச்சயம் என்பதை உணர்வீர்கள். உங்களின் வார்த்தைகளுக்கு மரியாதை கிடைக்கும். மற்றவர்களால் அங்கீகரிக்கப்படுவீர்கள்.

விருச்சிகம்
கிரகங்களின் சாதகமான பார்வையினால் திட்டமிட்ட காரியங்கள் நினைத்தபடி ஈடேறும். விருந்து, விசேஷங்களில் பங்கேற்பதால் மனமகிழ்ச்சியுடன் இருப்பீர்கள். மகிழ்ச்சியான நாள்.

தனுசு
குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பீர்கள். பணியிடங்களில் மகிழ்ச்சியான நிலை நிலவும். செய்யும் செயல்களில் திருப்தி அடைவீர்கள். திறமை வெளிப்படும் நாள்.

மகரம்
மனதை ஒருமுகப்படுத்த தியானம் உள்ளிட்டவைகளை செய்வீர்கள். தன்னம்பிக்கையால், மற்றவர்களை தன்வசமாக்குவீர்கள். புதிய அணுகுமுறைகளை பரிசோதித்து பார்ப்பீர்கள்.

கும்பம்
புதிய விஷயங்களிலும் வெற்றி கிடைக்கும். தொழில்முறை விவகாரங்களில் சாதகமான நிலை நிலவும். முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.

மீனம்
உங்களின் வார்த்தைகளுக்கு அங்கீகாரம் கிடைக்கும். கணவன் – மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். புதிய விஷயங்களில் அதிக ஆர்வம் கொள்வீர்கள்.

Advertisements

Leave a Reply