Home ஜோதிடம் இன்றைய ராசிபலன் – 23.01.2020

இன்றைய ராசிபலன் – 23.01.2020

150
0

மேஷம்
அதிர்ஷ்டம் ஒருமுறைதான் கதவை தட்டும் என்பதை மறந்துவிடவேண்டாம். நீண்டகால முதலீடுகளில் அதிக கவனம் அவசியம், புதியனவற்றை கற்றுக்கொள்ள விரும்புவீர்கள்.

ரிஷபம்
உண்மையே எப்போதும் இறுதியானது என்பதை மறந்துவிட வேண்டாம். உங்களின் வார்த்தைகளுக்கு அங்கீகாரம் கிடைக்கும். மற்றவர்களால் பாராட்டப்படுவீர்கள்.

மிதுனம்
குடும்பத்தில் பல முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். நீங்கள் தற்போது இருக்கும் நிலைக்கும் நேற்று நீங்கள் எடுத்த முடிவுகளே காரணம் என்பதை எந்நேரத்திலும் மறந்துவிட வேண்டாம்.

கடகம்
குடும்ப உறுப்பினர்களுடன் பொழுதை கழிப்பீர்கள். ரகசியங்களை பாதுகாக்க அதிக சிரத்தை எடுத்துக்கொள்வீர்கள். உங்களின் நடவடிக்கைகள் மற்றவர்களுக்கு ஆச்சர்யமளிக்கும். மகிழ்ச்சியான நாள்.

சிம்மம்
கணவன் – மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். நீண்டநாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். பிரியமானவர்களுடன் பொழுதை கழிப்பீர்கள்.

கன்னி
அமைதியான மனநிலை, சந்தோஷமான தருணம் உள்ளிட்டவைகளால் மனமகிழ்ச்சி அடைவீர்கள். பிரியமானவர்களுடன் நீண்ட தொலைவு பயணம் செல்வீர்கள்.

துலாம்
வாழ்க்கைத்துணையின் தேவைகளை நிறைவேற்றாததால், அவர்களின் கோபத்திற்கு ஆளாவீர்கள். சமாதானத்தால் மட்டுமே வெற்றி கிடைக்கும். பெர்சனல் விஷயங்களில் அதிக அக்கறை கொள்வீர்கள்.

விருச்சிகம்
நிதி விவகாரங்களில் அதிக அக்கறை காட்டுவீர்கள். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றுவதில் மும்முரம் காட்டுவீர்கள்.நீண்டகால பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

தனுசு
மற்றவர்களின் செயல்களால் மனக்குழப்பம் ஏற்படலாம். பிறர் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்த்தால் மனக்கசப்பை தவிர்க்கலாம். மனசஞ்சலத்தால் அவதிப்படுவீர்கள்.

மகரம்
தானுண்டு தன் வேலையுண்டு என்று இருந்தால் பல பிரச்னைகளிலிருந்து தப்பிக்கலாம். மற்றவர்களால் பாராட்டப்படுவீர்கள். வாகன போக்குவரத்தில் கவனம் அவசியம்.

கும்பம்
மற்றவர்களின் உள்விவகாரங்களில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. உணவு பழக்கவழக்கங்களில் கவனம் எடுத்துக்கொள்வது நல்லது.

மீனம்
எந்த காரியத்தையும் ஒன்றுக்கு இரண்டுமுறை செய்ய வேண்டிவரும். நிதிவிவகாரங்களில் அதிருப்தி நிலை நிலவும். நீண்டகால முதலீட்டு திட்டங்களுக்காக வழிவகுப்பீர்கள்.

Advertisements

Leave a Reply