Home ஜோதிடம் இன்றைய ராசிபலன் – 21.01.2020

இன்றைய ராசிபலன் – 21.01.2020

210
0

மேஷம்
கற்பனைக்கு எட்டாதவகையில் புதிய நிகழ்வுகளுடன் எதிர்காலம் துவங்கும். ஓய்வுநேரத்தை சுகமாக அனுபவிப்பீர்கள். கணவன் – மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். புதிய விஷயங்களை கற்றுக்கொள்வீர்கள்.

ரிஷபம்
மனசஞ்சலம் ஏற்படும் என்பதால் செய்யும் செயல்களில் முன்எச்சரிக்கை அவசியம். புதிய பொறுப்புகளை ஏற்பதில் அதிக கவனம் வேண்டும். எதிர்கால வாழ்க்கைக்காக திட்டமிடுவீர்கள். விழிப்புடன் இருந்தால், விரயங்களை தவிர்க்கலாம்.

மிதுனம்
பிரியமானவர்களுடன் பொழுதை இனிமையாக கழிப்பீர்கள். பால்யகால நண்பர்களை சந்திப்பீர்கள். விருந்து, விசேஷங்களில் பங்கேற்பதால் மனமகிழ்ச்சியுடன் இருப்பீர்கள்.

கடகம்
வார்த்தைகளில் நிதானம் காப்பது நல்லது. மற்றவர்களின் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது உத்தமம். எந்த விஷயங்களிலும் சமாதானத்தை செய்துகொள்ள மாட்டீர்கள். ஏற்றத்தாழ்வு அதிகம் உள்ள நாள்.

சிம்மம்
எதிர்பாராத நிகழ்வுகள் ஏற்படும் நாள். திட்டங்களை வகுத்து செயல்படுத்துவதில் தடுமாற்றம் நிகழும். குடும்ப உறுப்பினர்களின் நலனில் அக்கறை செலுத்துவது நல்லது.

கன்னி
வெளிவட்டார தொடர்புகள் போதிய பலனளிக்காமல் போகலாம். விழிப்புடன் இருந்து காரியங்களை செயல்படுத்துவது நல்லது. உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவதனால் மற்றவர்களிடமிருந்து கருத்து வேறுபாடு ஏற்படுவதை தவிர்க்கலாம்.

துலாம்
வெளிவட்டார தொடர்பு விரிவடையும். இன்றியமையாத விஷயங்களில் முக்கிய முடிவு எடுக்க வேண்டியிருப்பதால், ஒன்றுக்கு பலமுறை அந்த விஷயங்கள் குறித்து பெரியவர்களிடம் கலந்தாலொசிப்பது நல்லது.

விருச்சிகம்
ரகசியங்களை பாதுகாக்க அதிக சிரத்தை எடுத்துக்கொள்வீர்கள். தங்களது நலன் விரும்பிகள் அறியாதவகையிலேயே உங்களது சில செயல்பாடுகள் இருக்கும். எதிர்பார்ப்புகளை தவிர்த்தால் ஏமாற்றங்களை தடுக்கலாம்.

தனுசு
பங்காளிகள் உறுதுணையாக இருப்பர். உங்கள் வார்த்தைகளுக்கு அங்கீகாரம் கிடைக்கும். நீண்டகாலமாக இழுபறியாக இருந்த விவகாரங்களில் தீர்வு காணப்பெறுவீர்கள்.

மகரம்
அதிகம் உணர்ச்சிபடும் நாள். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்படும் என்பதால், வார்த்தைகளில் நிதானம் அவசியம். மற்றவர்களினால் அசவுகரியத்தை சந்திப்பீர்கள்.

கும்பம்
பயணம் செல்வது தொடர்பான எண்ணம் தோன்றும். எதிர்கால வாழ்க்கைக்காக திட்டமிடுவீர்கள். புதிய பொறுப்புகள் தேடி வரும். மகிழ்ச்சியான நாள்.

மீனம்
நிதிவிவகாரங்களில் அசவுகரியமான நிலை நிலவுவதால் கவனம் தேவை. விருந்து, விசேஷங்களில் பங்கேற்பதால் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். எதிர்கால வழ்க்கைக்காக திட்டமிடுவீர்கள்.

Advertisements

Leave a Reply