Home ஜோதிடம் இன்றைய ராசி பலன் – 10.01.2020

இன்றைய ராசி பலன் – 10.01.2020

159
0

மேஷம்: திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றி பெறும். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். புதிய நண்பர்கள் அறிமுகமாகக் கூடிய சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிர்வாகத்தில் உங்களுடைய மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும் வாய்ப்புகள் இருக்கிறது.

ரிஷபம்: மாணவர்களின் கல்வித் திறன் மேம்படும். மனதுக்கு பிடித்தவர்களால் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கப்பெறும். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும் இனிய நாளாக இருக்கும். உடல்நலம் சீராக இருக்கும். திருமணப் பேச்சுவார்த்தை வெற்றியில் முடியும். தம்பதியரிடையே ஒற்றுமை நிலவும். குடும்பத்தில் அமைதி நிறைந்திருக்கும்.

மிதுனம்: வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கப் பெறும். நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த பணவரவு திருப்திகரமாக இருக்கும். கடன் பாக்கிகள் வசூலாகும் சூழ்நிலை நிலவும். பொருளாதாரத்தில் ஏற்றம் காணப்படும். பல முக்கிய முடிவுகளை பற்றிய சிந்தனையில் இருப்பீர்கள்.

கடகம்: கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். குழந்தைகளால் மன மகிழ்ச்சி ஏற்படலாம். பிள்ளைகளின் கல்வி விஷயத்தில் கவனம் தேவை. பணவரவு திருப்திகரமாக இருக்கும். நீண்டநாள் எதிர்பார்த்து காத்திருந்த சுபச் செய்திகள் கைகூடிவரும்.

சிம்மம்: மாணவர்களுக்கு கல்வியில் ஏற்றம் உண்டாகக்கூடும். உங்கள் திறமைக்கேற்ப பாராட்டுகள் குவியும். சொந்தத் தொழில் செய்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். வெளிநாடுகளில் வசிப்பவர்கள் தாய் நாடு திரும்புவதற்கான மனோநிலை உருவாகலாம்.

கன்னி: சுயதொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு பல புதிய வாய்ப்புகள் கிடைக்கப்பெறும். வியாபாரத்தில் புதிய முயற்சிகளால் முன்னேற்றம் காண்பீர்கள். தனவரவு எதிர்பார்த்த படி திருப்திகரமாக அமையும். அரசுத்துறையில் நடைபெறவிருந்த காரியங்கள் எளிதில் முடிவடையும். வழக்கு தொடர்பான விஷயங்களில் வெற்றிகிட்டும். நீங்கள் எடுக்கும் எல்லா முயற்சிகளும் சுபமாக முடியும்.

துலாம்: தொலைதூர பிரயாணங்கள் மேற்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. பிரயாணங்களின் போது எச்சரிக்கையாக இருப்பது நல்லது. மாணவர்களின் கல்வி நிலை உயரும். கணவன் மனைவியிடையே கருத்துவேறுபாடு நிலவும். மனம் விட்டு பேசுவது நல்லது. நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த காரியங்கள் கைகூடி வரும்.

விருச்சிகம்: கூட்டு முயற்சிகள் பலன் தரும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்து இடுவது தொடர்பான விஷயங்களில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. ஜாமீன் போடுவதில் கவனம் தேவை. வீண் அலைச்சல்களால் மன சோர்வு உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்களின் கடின முயற்சியால் வெற்றிகள் குவியும். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு மந்த நிலை காணப்படும்.

தனுசு: உங்களின் நகைச்சுவை உணர்வால் பலரின் பாராட்டை பெறுவீர்கள். உங்களின் கடின முயற்சியால் புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறும். வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் காணப்படும். சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் ஈடுபட்டவர்களுக்கு வெற்றி கிட்டும்.

மகரம்: திருமணம் போன்ற சுபகாரிய பேச்சுக்கள் இனிதே நடந்தேறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிர்வாகத்தில் நல்ல பெயரை பெற்றுத்தரும். சக பணியாளர்களிடத்தில் பாராட்டு பெறுவீர்கள். சொந்த தொழில் செய்பவர்களுக்கு அலைச்சல் அதிகமாக இருக்கும் இருப்பினும் அதனால் ஆதாயம் உண்டாகும்.

கும்பம்: வீண் விரயங்களை தவிர்த்து சுபச் செலவுகளை மேற்கொள்வதால் பயன்பெறலாம். பத்திரிக்கை துறையில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான நாளாக இருக்கும். ஆடை ஆபரண சேர்க்கை பெண்களுக்கு கிடைக்கப்பெறும். கணவன் மனைவியிடையே சண்டை சச்சரவுகள் ஏற்படாமல் இருப்பதற்கு ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நல்லது.

மீனம்: குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். வெளியிடங்களுக்கு குடும்பத்துடன் சென்று வருவதன் மூலம் மன நிம்மதி கிடைக்கும். சமூக சிந்தனையில் மூழ்கி இருப்பதற்கான சூழ்நிலை நிலவும். சமூகத்தின் மீது அக்கறை கொள்வீர்கள்.

Advertisements

Leave a Reply