Home ஜோதிடம் இன்றைய ராசிபலன் – 08.01.2020

இன்றைய ராசிபலன் – 08.01.2020

160
0

மேஷம்
முக்கிய விஷயங்களில் மாற்றங்களை மேற்கொள்வீர்கள். புதிய இலக்குகளை நோக்கிய வகையில் செயல்பாடுகள் இருக்கும். குடும்ப உறுப்பினர்களிடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். மகிழ்ச்சியான நாள்.

ரிஷபம்
வாழ்வில் திருப்புமுனை ஏற்படும் நாள். விளைவுகளை முன்னரே அறிந்து முன்னெச்சரிக்கையாக இருப்பீர்கள். பழையகால அனுபவங்களிலிருந்து புதியனவற்றை கற்பீர்கள்.

மிதுனம்
நிதி விவகாரங்களில் திருப்திகரமான நிலை இருக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். மகிழ்ச்சியான நாள்.

கடகம்
மனசஞ்சலத்தால் பாதிப்படையும் நாள். பணியிடங்களில் விரோதப்போக்கு நிலவும். மனஅமைதிக்கு தியானம் மேற்கொள்ளவும்.

சிம்மம்
இரகசியங்களை பாதுகாப்பதில் அதிக அக்கறை கொள்வீர்கள். மற்றவர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படும் என்பதால், வார்த்தைகளில் நிதானம் அவசியம். முடிவுகளை எடுப்பதில் தடுமாற்றம் நிகழும்.

கன்னி
கிரகங்களின் சாதகமான பார்வையினால் நினைத்த காரியங்கள் எண்ணியபடி ஈடேறும். இரவுநேர பயணங்களில் அதிக கவனம் வேண்டும். மற்றவர்களை திருப்திபடுத்த அதிக சிரத்தை எடுத்துக்கொள்வீர்கள்.

துலாம்
மனதில் குற்ற உணர்வு தோன்றி மறையும். ஏதோ ஒன்றை இழந்தது போன்று உணர்வீர்கள். வாகன போக்குவரத்தில் கவனம் அவசியம்.

விருச்சிகம்
விவாதங்களில் முக்கிய முடிவு எடுப்பீர்கள். உணர்ச்சிகளுக்கு அதிக இடமளிக்காதீர்கள். பிரியமானவர்களுடன் அதிக நேரத்தை செலவழிப்பீர்கள்.

தனுசு
பல முயற்சிகளுக்கு பின்னரே காரியங்கள் தடையின்றி முடியும். மனசஞ்சலம் அதிகரிக்கும். அதிகம் உணர்ச்சிவசப்படுவதால், விரயங்களே அதிகரிக்கும்.

மகரம்
கணவன் – மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்படும் என்பதால், கடும் வார்த்தைகளை தவிர்ப்பது நல்லது போட்டி, பந்தயங்களில் நேர விரயத்தை தவிர்ப்பது நல்லது. வாகன போக்குவரத்தில் அதிக கவனம் அவசியம.

கும்பம்
அடுத்தது என்ன அடுத்தது என்ன என்பதை தெரிந்துகொள்ள அதிக ஆர்வம் காட்டுவீர்கள். அதுகுறித்த ஆலோசனைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருவீர்கள். முழு திருப்தி ஏற்படாத நிலையால், மனம் சோர்வடைவீர்கள்.

மீனம்
கணவன் – மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். புதிய பொறுப்புகளை ஏற்பீர்கள். மகிழ்ச்சியான நாள்.

Advertisements

Leave a Reply