Home ஜோதிடம் இன்றைய ராசி பலன்

இன்றைய ராசி பலன்

198
0

மேஷம்
நேரம் பார்த்துக் கொண்டிருக்க இப்போது நேரமில்லை. அடுத்தடுத்த கடமைகள் வரிசைக்கட்டி நிற்கின்றன. பயன்படுத்திக் கொள்ளுங்கள். நாளைக்கு செய்து கொள்ளலாம் என்று எதையும் தள்ளிப்போட வேண்டாம். அது உங்களுக்கு எதிராக அமையும்.

ரிஷபம்
திருமணம் கைக்கூடும் நேரம் இது. ஆனால், எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. கிரக நிலைகள் சில வாய்ப்புகளை தட்டிக்கழிக்க வாய்ப்புள்ளது. உங்கள் முயற்சிக்கேற்ற பலன் நிச்சயம் உண்டு.

மிதுனம்
நண்பர்களின் ஆலோசனைகளை கேட்டுக் கொள்ளுங்கள். சில டெக்னிக் ஐடியாக்கள் உங்களுக்கு கைக்கொடுக்கும். இது போதும் என்று பிக்ஸ் செய்து கொள்ள வேண்டும். பசி இருக்க வேண்டும். அப்போது தான் ஒரு நோக்கமும், முயற்சியும் இருக்கும்.

கடகம்
நேரம் நன்றாக இருக்கிறது. வேறு என்ன சொல்ல. தொட்டது துலங்கும். தடைகள் இனி இல்லை. உங்கள் வெற்றி நடையை இனி எவராலும் தடுக்க இயலாது. இருந்தாலும் நிதான வேகத்தில் செல்வது உங்கள் வாடிக்கை.

சிம்மம்
கருத்து வேறுபாடு காரணமாக தவறான புரிந்துணர்வு காணப்படும். உங்கள் துணையின் கருத்துக்களை புரிந்து கொண்டு இருவரும் பரஸ்பரம் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டியது அவசியம்.

கன்னி
உங்கள் மதிப்பிற்கு ஏற்ற ஊதியம் தர வேண்டும் என எண்ணுவீர்கள். இன்று நீங்கள் உற்சாகமான ஆற்றலுடன் காணப்படுவீர்கள். நீங்கள் குறைந்த எதிர்பார்ப்புடன் கடினமாக உழைப்பீர்கள். இதனால் நற்பலன்கள் ஏற்படும்

துலாம்
எதிர்காலத்திற்கு மேலும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். உங்கள் தேவைகள் குறித்து பேசவில்லை என்றால், அது அடுத்த மாதம் வரை தள்ளிப் போக வாய்ப்புள்ளது. குறிப்பாக, தம்பதியினர் தங்களுக்குள் நல்ல புரிதலை ஏற்படுத்திக் கொள்ள உட்கார்ந்து பேச வேண்டியது அவசியம்.

விருச்சிகம்
உங்களின் எதிர்கால கிரக அமைப்புகள் நிலைத்தன்மை இன்றி காணப்பட்டாலும், இன்றைய அமைப்பு சற்று ஆடம்பரமாகவே இருக்கும். பணியிடத்தில் திருப்திகரமான நிலை இருக்கும். நீங்கள் தரமான வகையில் பணிகளை முடித்துத் தருவீர்கள். இதனால் உங்கள் மேலதிகாரிகளிடம் நற்பெயர் பெறுவீர்கள்.

தனுசு
உங்கள் வாழ்க்கையில் எது உங்களுக்கு உண்மையில் முக்கியம் என்பதை உணரும் நாள் இது. நீங்கள் பொதுவாக புறக்கணித்து வந்த விஷயங்கள் எல்லாம் இப்போது வெளிச்சத்திற்கு வரும். இதன்மூலம், உங்களின் டென்ஷன்கள் குறையும்.

மகரம்
இன்று நீங்கள் பிறருடன் பழகும் போது கவனமாகப் பழக வேண்டும். சிறிதளவு பரிச்சயமானவர்களிடம் இன்று தவறான புரிந்துணர்வு ஏற்படும். தேவையற்ற விளைவுகளை தவிர்க்க நீங்கள் உங்கள் வார்த்தைகளில் கவனம் செலுத்த வேண்டும்.

கும்பம்
இன்று வெற்றி காண்பதற்கு சிறந்த நாள். உங்களிடம் விரைந்து செயலாற்றும் உறுதியும் தைரியமும் காணப்படும். உங்களின் சரியான திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் உங்களிடம் காணப்படும். உங்கள் பணிகளை குறித்தநேரத்தில் முடிக்க செயலாற்றுவீர்கள். நீங்கள் தொழில் சார்ந்த அணுகுமுறை மேற்கொள்வீர்கள். இது உங்களுக்கு மிகுந்த பலனளிக்கும்.

மீனம்
மிகச்சிறந்த சிந்தனையாளரான நீங்கள், பழமையான கேள்விகளுக்கு கூட சரியான பதிலை கண்டறிவீர்கள். அமைதியாக உங்கள் வேலையை மட்டும் பாருங்கள். அடுத்த முறை நிச்சயம் உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும்.

Advertisements

Leave a Reply