Home ஜோதிடம் இன்றைய ராசிபலன் – 31.12.2019

இன்றைய ராசிபலன் – 31.12.2019

143
0

மேஷம்
சட்டதிட்டங்களை வகுப்பதோடு மட்டுமல்லாமல் பின்பற்றவும் செய்வீர்கள். பலனை எதிர்பார்த்து பல செயல்களை நிறைவேற்றுவீர்கள். குழுவில் ஒருத்தனாக இல்லாமல், தலைமையேற்று நடத்தும் பண்பை கொண்டவராக திகழ்வீர்கள். பயண திட்டங்களை வகுப்பதற்கு சிறந்த நாள்.

ரிஷபம்
சட்ட விவகாரங்களில் அதிக கவனம் தேவைப்படும் நாள். உங்களது பங்களிப்பினால் நின்று போன காரியங்களையும் செய்து முடிப்பீர்கள். கணவன் – மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். மற்றவர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படும் என்பதால், வார்த்தைகளில் நிதானம் கடைபிடிப்பது நல்லது.

மிதுனம்
உங்களின் செயல்கள் மற்றவர்களுக்கு தொந்தரவு தருவதாய் அமையலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் பணப்பரிவர்த்தனை திருப்திகரமாக இருக்கும். மாற்றுவழிகளில் சிந்தித்து செயல்படுவீர்கள். சக பணியாளர்களுடன் விரோதப்போக்கு தோன்றும்.

கடகம்
புதிய நட்புக்களால் மனம் மகிழ்வீர்கள். மற்றவர்களால் பாராட்டப்படுவீர்கள். உங்கள் செயல்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும் மகிழ்ச்சியான நாள்.

சிம்மம்
அனுபவமே சிறந்த ஆசான் என்பதை உணர்வீர்கள். கோபத்தை கட்டுப்படுத்துவதனால், பெரும் விரயத்தை தவிர்க்கலாம். உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல் திணறுவீர்கள். வருமானத்தை அதிகரிக்கும் வழிகள் குறித்த சிந்தனை மேலோங்கும். மற்றவர்களின் ஆலோசனை தக்க நேரத்தில் உதவும்.

கன்னி
போட்டி, பந்தயங்களில் அதிக நேரத்தை செலவழிப்பதனால், விரயங்கள் அதிகம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மனசாட்சிக்கு மதிப்பளிப்பீர்கள். குழப்பமான மனநிலையிலிருந்து விடுபட முயல்வீர்கள்.

துலாம்
குடும்ப உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்படும் என்பதால், வார்த்தைகளில் நிதானம் அவசியம். நேர்மறை சிந்தனை மற்றும் எண்ணங்களை வளர்த்துக்கொள்வது நல்லது. எதிர்பார்த்த நற்செய்தி விரைவில் உங்களை வந்தடையும். முக்கியமான ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள்.

விருச்சிகம்
நீண்டகால முதலீடுகள் குறித்த சிந்தனை அதிகரிக்கும். நிராகரித்த விசயங்களை மறுஆய்வு செய்வீர்கள். விருந்து, விசேஷங்களில் பங்கேற்பதால் மனம் மகிழ்ச்சி கொள்வீர்கள்.

தனுசு
முன்கோபத்தை தவிர்ப்பதனால், விரயங்களை தடுக்கலாம். பாதுகாப்பு குறித்த விசயங்களில் அதிக கவனம் தேவை. பிரியமானவர்களுடன் அதிக நேரத்தை செலவழிப்பீர்கள்.

மகரம்
செய்யும் விசயங்களில் அதிக சிரத்தை எடுத்துக்கொள்வீர்கள். முன்னேற்றம் குறித்த சிந்தனை மேலோங்கும். நிதிநிலைமை சீராக இருக்கும். மகிழ்ச்சியான நாள்.

கும்பம்
மற்றவர்கள் நிராகரிக்கும் விசயங்களை அனயாசமாக செய்து முடிப்பீர்கள். மாற்றுக்கருத்து உடையவர்களிடம் விலகி இருப்பது நல்லது. குழந்தைகள் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களிடையே அனுசரித்து செல்வது நல்லது. தனித்து செயல்படுவதால் நிம்மதி அடைவீர்கள்.

மீனம்
மற்றவர்களின் செயல்களினால் அதிக கோபம் அடைவீர்கள். யார் என்ன சொன்னாலும் எடுக்கும் முடிவு தனதாக இருக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருப்பீர்கள். விளைவுகளை அறிந்து செயல்படுவீர்கள். எதிர்கால வாழ்க்கைக்காக திட்டமிடுவீர்கள்.

Advertisements

Leave a Reply