மேஷம்
புத்துணர்வுடன் புது காரியங்களை துவங்குவீர்கள். துவக்கம் சரியாக இருப்பதால் முடிவுகளும் எதிர்பார்த்தபடி அமையும். பிரியமானவர்கள் தங்களை புரிந்துகொள்ளாததால், மனசஞ்சலம் அடைவீர்கள்.
ரிஷபம்
பேச்சுவார்த்தையால் அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காணலாம் என்பதை உணர்வீர்கள். உணர்ச்சிவசப்படுவதால் ஒரே செயலை பலமுறை செய்யவேண்டும் என்பதை மறக்கவேண்டாம்.
மிதுனம்
கடந்த கால நினைவுகளிலிருந்து விலகிச்செல்வீர்கள். எதிர்காலத்திற்காக திட்டமிடுவீர்கள். நிதிவிவகாரங்களில் அதிக கவனம் செலுத்துவீர்கள். வாகனப்போக்குவரத்தில் நிதானம் அவசியம்.
கடகம்
ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த நாள். மற்றவர்களுடன் கருத்துவேறுபாடு ஏற்படும் என்பதால், வார்த்தைகளில் நிதானப்போக்கு அவசியம். உணர்ச்சிவசப்படுவதால், நண்பர்களை இழக்கநேரிடும்.
சிம்மம்
எதிர்பாராத திருப்பங்கள் ஏற்படும். அனைத்தும் நன்மையிலேயே முடியும். நினைத்த காரியம் நிறைவேற விட்டுக்கொடுத்து செல்வீர்கள். போட்டி பந்தயங்களில் வெற்றி பெறுவீர்கள்.
கன்னி
அதிகம் உணர்ச்சிவசப்படுவீர்கள். எதிலும் சென்டிமென்ட் பார்ப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களின் தேவைக்கு முன்னுரிமை அளிப்பீர்கள். உணவுப்பழக்கவழக்கத்தில் கவனம் தேவை.
துலாம்
கருத்துவேறுபாடு ஏற்படும் என்பதால், வார்த்தைகளில் நிதானப்போக்கு அவசியம். நீண்ட தொலைவு பயணத்திற்கு திட்டமிடுவீர்கள். நிதிவிவகாரங்களில் அதிக கவனம் அவசியம்.
விருச்சிகம்
வாழ்வில் இழந்ததை நினைத்து கவலை கொள்வீர்கள். மறைந்திருந்த திறமைகள் வெளிப்படும். மன சஞ்சலம் தீர்க்க நண்பர்களுடன் பொழுதை போக்குவீர்கள்.
தனுசு
மகிழ்ச்சியான நாள். எதிர்கால வாழ்க்கைக்காக திட்டமிடுவீர்கள். தொட்டது துலங்கும். நிதிவிவகாரங்களில் எதிர்பார்த்த நன்மைகள் ஏற்படும்.
மகரம்
நண்பர்கள் மற்றும் பிரியமானவர்களுடன் பொழுதை கழிப்பீர்கள். மகிழ்ச்சியான நாள். விருந்து, விசேஷங்களில் பங்கேற்பீர்கள்.
கும்பம்
நகைச்சுவையே சிறந்த நோய் தீர்க்கும் மருந்து என்பதை எப்போதும் மறவாதீர்கள். உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவீர்கள். விருந்து, விசேஷங்களில் பங்கேற்பீர்கள்.
மீனம்
குடும்பம் மற்றும் பணியிடங்களில் புத்துணர்வுடன் இருப்பீர்கள். வழக்கமான நடவடிக்கைகளிலிருந்து விலகிச்செல்வீர்கள். புதிய பொருட்கள் வாங்குவீர்கள். புதிய முதலீடுகள் மேற்கொள்வீர்கள். மகிழ்ச்சியான நாள்