Home ஜோதிடம் இன்றைய ராசி பலன் – 23.12.2019

இன்றைய ராசி பலன் – 23.12.2019

149
0

மேஷம்
ஆலய வழிபாட்டால் அமைதி கிடைக்கும் நாள். மதியத்திற்கு மேல் மனக்கலக்கம் ஏற்படும். யோசித்துச் செயல்பட வேண்டியது அவசியமாகும். உதவி செய்வதாகச் சொன்னவர்கள் கடைசி நேரத்தில் கையை விரிக்கலாம்.

ரிஷபம்
பிரதோ‌ஷ வழிபாட்டால் பெருமை கூடும் நாள். கல காரிய வெற்றிக்கு மாற்று இனத்தவர்கள் ஒத்துழைப்பு உண்டு. உறவினர்கள் வருகையால் உள்ளம் மகிழ்வீர்கள். எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் வந்துசேரும்.

மிதுனம்
உற்சாகத்துடன் செயல்படும் நாள். புதிய தொழில் தொடங்கும் எண்ணம் மேலோங்கும். குழந்தைகளின் வழியில் உதிரி வருமானம் உண்டு. நண்பர்களின் ஒத்துழைப்போடு நல்ல காரிய மொன்றைச் செய்து முடிப்பீர்கள்.

கடகம்
மகிழ்ச்சி கூடும் நாள. முயற்சிக்கு இடையூறாக இருந்தவர்கள் விலகுவர். பணத் தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். நாட்டுப்பற்றுமிக்க ஒருவரால் வீட்டுப் பிரச்சினையைத் தீர்த்துக் கொள்வீர்கள். உத்யோக முயற்சி கைகூடும்.

சிம்மம்
தொழில் போட்டிகள் அகலும் நாள். சொன்ன சொல்லைக் காப்பாற்றுவீர்கள். காவல்துறை சம்பந்தப்பட்ட வகையில் ஏற்பட்ட மனக்கலக்கம் அகலும். பணியாளர்களின் பக்கபலமாக இருப்பர். பயணங்களால் பலன் உண்டு.

கன்னி
விவகாரங்கள் அகலும் நாள். விலகிச் சென்ற சொந்தங்கள் விரும்பி வந்திணைவர். செய்தொழிலில் லாபம் எதிர்பார்த்தபடி வந்து சேரும். நீண்டநாளைய பகையொன்று நட்பாகும். பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும்.

துலாம்
தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளும் நாள். வரன்கள் வாயிற்கதவைத் தட்டும். வீடுமாற்றம், நாடு மாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள். பலநாட்களாக நடைபெறாத காரியம் இன்று நடைபெறும். திடீர் பயணம் திரவிய லாபம் தரும்.

விருச்சிகம்
நந்தீஸ்வரர் வழிபாட்டால் நலம் காண வேண் டிய நாள். பணத் தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும் நாள். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். நண்பர்கள் நல்ல தகவலைக் கொண்டு வந்து சேர்ப்பர். அரசியலில் ஈடுபாடு அதிகரிக்கும்.

தனுசு
விரயங்கள் கூடும் நாள். நேற்றைய சேமிப்பு இன்று செலவிற்கு கைகொடுக்கும். நண்பர்களின் உதவியோடு தொழிலில் வளர்ச்சியைக் காண்பீர்கள். புதிய திட்டங்களுக்கு மாற்றினத்தவர்களின் ஆதரவு உண்டு. மருத்துவச் செலவு உண்டு.

மகரம்
விரோதிகள் விலகும் நாள். வியாபாரத்தில் புதியவர்கள் வந்திணைவர். குடும்பத்தில் ஏற்பட்டகுழப்பங்கள் அகலும். தந்தை வழி உறவினர்களால் தனலாபம் கிடைக்கும். ஆரோக்கியத்தில் அக்கரை செலுத்துவது நல்லது.

கும்பம்
நல்ல தகவல் இல்லம் தேடிவரும் நாள். தடைகள் விலகி தனலாபம் பெருகும். தாழ்வு மனப்பான்மையை அகற்றிக் கொள்வது நல்லது. திருமண முயற்சி கைகூடும். பிள்ளைகள் வழியில் சுபச்செலவுகள் ஏற்படும்.

மீனம்
காலை நேரத்தில் கலக்கம் ஏற்படும் நாள். காசுபணம் விரயமாகின்றதே என்று கவலைப்படுவீர்கள். பூர்வீக சொத்துக்களால் எதிர்பார்த்த லாபம் கிட்டும். பணிநிரந்தரம் பற்றிய தகவல் உண்டு. பணத்தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும்.

Advertisements

Leave a Reply