மேஷம்
கடினமாக நாட்களை சந்திக்க இருக்கிறீர்கள். உங்கள் கற்பனைக்கு நேர்மாறாக அனைத்தும் நடக்கும் என்பதால் அதிக கவனம் வேண்டும். தோல்விகளுக்கு பொறுப்பேற்றுக்கொள்ளுங்கள்.
ரிஷபம்
குடும்ப உறுப்பினர்களின் முன்னேற்றத்தில் அதிக அக்கறை கொள்வீர்கள். கணவன் – மனைவி உறவு திருப்திகரமாக இருக்கும். மனைவியை குழந்தை போல பார்த்துக்கொள்வீர்கள். எதிர்பாராத நிகழ்வுகளை எதிர்கொள்வீர்கள்.
மிதுனம்
மனநிம்மதியான நாள். இதுபோன்ற நாள் மீண்டும் வராதா என ஏங்கும் அளவிற்கு சிறப்பான நாள். அனுபவித்துக்கொள்ளுங்கள்.
கடகம்
பழைய நட்புகள், நிதி விவகாரங்கள் சுமுகமாக இருக்கும். நீங்கள் எதிர்பார்த்த விசயங்கள் எதிர்பார்த்த வகையிலேயே நிறைவேறும். பணம் கொடுக்கல் -வாங்கல் நடைமுறையால் உறவுகளுக்குள் விரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. கவனம்.
சிம்மம்
உங்களை சுயலாபத்திற்காக மற்றவர்கள் பயன்படுத்திக்கொள்வார்கள். தொழில் விசயங்களில் நண்பர்களின் ஆலோசனை வழங்குவார்கள்.. ஆனால், அவற்றை ஆராய்ந்து ஏற்றுக்கொள்ளுதல் நலம். பல விசயங்களில் விட்டுக்கொடுத்து செல்ல வேண்டியிருக்கும். கொண்ட கொள்கைகளிலிருந்து தவறமாட்டீர்கள்.
கன்னி
கிரகங்கள் சாதகமாக இருப்பதால், எடுத்த செயல்கள் தோல்வியின்றி நிறைவேறும். நிதி விவகாரம், முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் நிகழ்வுகளில் அதிக கவனம் அவசியம். நினைத்தது நிறைவேறும் நாள்.
துலாம்
அழகுபடுத்திக்கொள்ள அதிகநேரம் செலவு செய்வீர்கள். இருக்கும் நிலையில் அதிருப்தி கொள்வீர்கள். தடைகள் அதிகம் இருப்பதால், அகலக்கால் வைக்காமல் இருப்பது நல்லது.
விருச்சிகம்
கிரகங்கள் சாதகமாக இல்லாததால், சவாலான காலகட்டமிது. மற்றவர்களிடமிருந்து தனித்து இருப்பதுபோன்று உணர்வீர்கள். நிதானப்போக்கு நன்மை தரும்.
தனுசு
தாழ்வு மனப்பான்மையாக உணர்வீர்கள். வழக்கமான செயல்களிலிருந்து விலகிச்செல்வீர்கள். பணியிடத்தில் அதிகம் சோர்வு கொள்வீர்கள். தியானம் செய்வது மனதிற்கு நன்மை பயக்கும்.
மகரம்
தொழில்சார்ந்த விசயங்களில் நல்ல அணுகுமுறை ஏற்படும். எதிர்பார்த்த காரியங்களில் வெற்றி கிட்டும். குடும்ப உறுப்பினர்களுக்காக அதிக செலவு செய்வீர்கள். வியாபாரத்தில் குறைந்த லாபமே கிடைக்கும்.
கும்பம்
மகிழ்ச்சியான நாள். சோம்பலை தவிர்த்தால் வெற்றி உங்கள் வசம் தான். எதிர்கால வாழ்க்கைக்கு திட்டமிடுவீர்கள். விருந்து விசேசங்களில் கலந்துகொள்வீர்கள்.
மீனம்
கிரகங்கள் சாதகமாக இருப்பதால், எண்ணிய செயல்களில் வெற்றி காண்பீர்கள். வழக்கமான செயல்களிலிருந்து மாற்றிச்செய்து புதுமைகளை படைப்பீர்கள். பிரியமானவர்களுக்காக எதையும் விட்டுக்கொடுப்பீர்கள்.