மேஷம்
கற்பனை வானில் சிறகடித்து பறப்பீர்கள். குழந்தைகளின் விருப்பங்களை நிறைவேற்ற பிரயத்தனம் மேற்கொள்வீர்கள். உணவு விஷயங்களில் அதிக அக்கறை அவசியம்.
ரிஷபம்
கடந்த கால அனுபவங்களில் இருந்து புதிய பாடம் கற்றுக்கொள்வீர்கள். சர்வாதிகார போக்குடன் செயல்படுவதால், மற்றவர்களின் கோபத்துக்கு ஆளாவீர். பிரியமானவர்களுடன் இருந்த பிணக்கு நீங்கும்.
மிதுனம்
பணிசார்ந்த விவகாரங்களில் மனஅமைதி ஏற்படும். எதிர்கால வாழ்க்கைக்காக இப்போதே திட்டமிட துவங்குவீர்கள். பயணங்களால் ஆதாயம் காணும் நாள்..
கடகம்
பிரியமானவர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படும் என்பதால் வார்த்தைகளில் நிதானம் கடைபிடிக்க வேண்டிய நாள். கிரகங்களின் சாதகமான பார்வையினால், எண்ணிய காரியங்கள் நினைத்தபடி நடந்தேறும்.
சிம்மம்
கனவுகளை நனவாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவீர்கள். நிதி விவகாரங்களில் திருப்திகரமான நிலை நிலவும். நேர்மறை எண்ணத்துடன் செயல்படுவீர்கள்.
கன்னி
கணவன் – மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பிரியமானவர்களுடன் பொழுதை இனிமையாக கழிப்பீர்கள். மற்றவர்களால் பாராட்டப்படுவீர்கள். மகிழ்ச்சியான நாள்.
துலாம்
நீண்டநாட்களாக தொடரும் விவகாரத்தில், விட்டுக்கொடுத்து செல்வதனால் மட்டுமே தீர்வு ஏற்படும் என்பதை உணர்வீர்கள். மற்றவர்களின் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது.
விருச்சிகம்
வாகன விபத்துக்கள் நடைபெற அதிக வாய்ப்புள்ளதால் கவனம். மதிப்புமிக்க நபர்கள் மற்றும் பொருட்களை கையாளுவதில் அதிக கவனம் அவசியம். எதிலும் விழிப்புணர்வுடன் இருங்கள்.
தனுசு
பணியிடம் மற்றும் நிதி விவகாரங்களில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். எதிர்காலத்திற்காக திட்டமிடுவீர்கள். மகிழ்ச்சியான நாள்.
மகரம்
புதிய வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் வந்து சேரும். உங்களின் கருத்துகளுக்கு அங்கீகாரம் கிடைக்கும். கணவன் – மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும்.
கும்பம்
நினைப்பது ஒன்று நடப்பது ஒன்று ஆக இருக்கும். மற்றவர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படும் என்பதால் வார்த்தைகளில் நிதானம் அவசியம். விழிப்புடன் இருந்தால் விரயங்களை தவிர்க்கலாம்.
மீனம்
வையகம் இன்று உங்களுக்குள் அடங்கும். செய்யும் தொழில்களில் வெற்றி காண்பீர்கள். புதிய முயற்சிகளை பரிசீலித்து பார்ப்பீர்கள். மகிழ்ச்சியான நாள்.