Home ஜோதிடம் இன்றைய ராசிபலன் – 14.12.2019

இன்றைய ராசிபலன் – 14.12.2019

166
0

மேஷம்
கணவன் – மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்க தயங்கமாட்டீர்கள். நிதி விவகாரங்கள் திருப்தி தரும். மகிழ்ச்சியான நாள்.

ரிஷபம்
கசப்பான அனுபவங்களை மறக்க முயற்சிப்பீர்கள். புதிய பாதையில் நடைபோட திட்டம் தீட்டுவீர்கள். ஷாப்பிங்கில் அதிக ஈடுபாடு காட்டுவீர்கள். வாகனப்போக்குவரத்தில் நிதானம் கடைபிடிப்பது நல்லது.

மிதுனம்
சுயதேவைகளை நிறைவேற்றிக்கொண்டு மற்றவர்களுக்கும் இயன்ற உதவிகளை செய்வீர்கள். மற்றவர்களால் பாராட்டப்படுவீர்கள். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றி மகிழ்வீர்கள்.

கடகம்
எதிர்கால வாழ்க்கைக்காக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். கடந்தகால தவறுகளிலிருந்து பாடம் கற்பீர்கள். மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதால் வார்த்தைகளில் நிதானம் கடைபிடிப்பது நல்லது. மற்றவர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டுவீர்கள்.

சிம்மம்
பயண திட்டங்களை இன்று துவங்காமல் இருப்பது நல்லது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பயணம் மேற்கொள்வதனால், விரயங்களை தவிர்க்கலாம். நண்பர்கள், உறவினர்கள் பக்கபலமாக இருப்பர்.

கன்னி
நினைப்பது ஒன்று நடப்பது வேறொன்றாக உள்ளதே என்று வருத்தப்படுவீர்கள். வெளிவட்டார தொடர்பினால் ஆதாயம் கிடைக்கும். நீண்டகால திட்டங்களில் அதிக கவனம் செலுத்துவீர்கள்.

துலாம்
கிரகங்களின் பார்வை சாதகமற்ற நிலையில் இருப்பதால் மனசஞ்சலம் அதிகரிக்கும். மற்றவர்களுடன் கருத்துவேறுபாடு ஏற்படும் என்பதால், வார்த்தைகளில் நிதானம் கடைபிடிப்பது நல்லது.

விருச்சிகம்
தலை என்ற ஒன்று இருந்தால் தலைவலி என்ற ஒன்றும் இருக்கும் என்பதை எத்தருணத்திலும் மறக்க இயலாது. மனிதராய் பிறந்த அனைவருக்கும் இது பொதுவானது என்பதை உணர்வீர்கள். மற்றவர்களை முதல் பார்வையிலேயே நம்புவது ஆபத்தானது என்பதை எத்தருணத்திலும் மறக்க மாட்டீர்கள்.

தனுசு
கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு தோன்றும். தொழில்முறை விவகாரங்களில் அதிக முதலீடு மேற்கொள்ள திட்டமிடுவீர்கள். ஒவ்வொரு படியையும் கவனமுடன் எடுத்து வைப்பது நல்லது.

மகரம்
மற்றவர்களால் பாராட்டப்படுவீர்கள். மற்றவர்களின் உயர்வுக்கு ஏற்ற உதவிகளை செய்வீர்கள். மற்றவர்கள் ஆதரவு தாராளமாக கிடைக்கும்.

கும்பம்
கடந்த காலங்களில் ஏற்பட்ட அவமானங்கள், துரோகங்களால் தான் இத்தகைய நிலையை நாம் அடைந்துள்ளோம் என்பதை உணர்வீர்கள். அனுபவ முதிர்ச்சி மற்றும் அறிவே சிறந்த ஆயுதங்களாக உணர்வீர்கள். விருந்து, விசேஷங்களில் பங்கேற்பதால் மனமகிழ்ச்சி அடைவீர்கள்.

மீனம்
மற்றவர்களால் பாராட்டப்படுவீர்கள். மனசஞ்சலத்துடன் இருப்பதால், செய்யும் காரியங்களில் முழு ஈடுபாடு செலுத்த இயலாமல் தவிப்பீர்கள். மாற்றங்களை எதிர்கொள்ள தயாராவீர்கள்.

Advertisements

Leave a Reply