Home ஜோதிடம் இன்றைய ராசிபலன் – 05.12.2019

இன்றைய ராசிபலன் – 05.12.2019

313
0

மேஷம்
உங்கள் மனதை ஒருநிலைப்படுத்த முடியவில்லையே என்று கவலை கொள்ள வேண்டாம். நேரம் வர வேண்டும் அல்லவா. நீங்கள் அதிகம் நேசிக்கும் நபர் உங்களை இப்போது அதிகம் நேசிக்கத் தொடங்குவார். உங்கள் மனதை இது பெரிதும் மகிழ்ச்சிப்படுத்தும்.

ரிஷபம்
வாழ்க்கையின் உச்சக்கட்ட வீழ்ச்சியான தருணங்களை சந்திக்க நேரிடும். உங்கள் தனிப்பட்ட பிரச்சனைகளை அதிகம் மெனக்கெட்டு தீர்த்து வைக்க வேண்டிய சூழலில் உள்ளீர்கள். உங்கள் தொழில் பிரச்சனையும், தனிப்பட்ட பிரச்சனையும் தனித்தனி அல்ல.

மிதுனம்
யாராவது உங்களிடம் வந்து நீங்கள் முன்பு போல் இல்லை என்று சொன்னாலோ, முன்பு போல் உண்மையாக இல்லை என்று சொன்னாலோ , காது கேட்காதது போலவே இருங்கள். உங்கள் கிரக நிலை உங்களை அவ்வாறு தோற்றுவிக்கும். உங்கள் மனம் என்ன சொல்கிறதோ அதை பின்பற்றுங்கள், போதும்.

கடகம்
தீர்க்கமான விவாதங்கள் உங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டறிவதற்கு தானே தவிர, மேலும் வளர்க்க அல்ல. உண்மை என்னவோ அதில் மட்டும் கவனம் செலுத்துங்கள். உலகத்தை நீங்கள் வேறு கோணத்தில் பார்க்கத் தொடங்கினால் வெற்றி உறுதி.

சிம்மம்
நிதி நிலைமை தான் உங்களை நிம்மதியில்லாமல் வைத்திருக்கும். ஆனால், விரைவில் கடன்களை எல்லாம் தீர்த்து வைக்கும் சூழல் வரப் போகிறது. எனவே, சேமிப்புக்கு தயாராகுங்கள். தனித்து விடப்பட்டது போல் உணர்ந்தாலும் உங்கள் பலம் அதிகரிக்கவே செய்யும் என்பதை மறக்க வேண்டாம்.

கன்னி
மீண்டும் சிறப்பாக செயல்படத் துவங்குவீர்கள். உங்களது பணியைக் கண்டு மேலதிகாரிகள் வியப்பார்கள். ஆனால், எதற்காக உழைக்கிறோம் எனபதை மனதில் ஓட்டிப்பார்த்தல் அவசியம். கிரக நிலைகள் உங்களுக்கு ஓரளவிற்கு சாதகமான பலனைத் தரும்.

துலாம்
மற்றவர்களின் கையில் உங்கள் வாழ்க்கையை ஒப்படைக்க வேண்டாம். முடிவுகளை சுயமாக எடுக்கப் பழகுங்கள். ஆதாயம் குறைவாக இருந்தாலும், நிதி நெருக்கடி இருக்காது.

விருச்சிகம்
குடும்பத்திற்காக அதிக நேரம் செலவிடுவீர்கள். அதில், உங்கள் சுமைகளை மறந்து போவீர்கள். வெளியூர் பயணங்களுக்கு திட்டமிட்டு சுற்றி இருப்பவர்களை மகிழ்விப்பீர்கள்.

தனுசு
பொறுப்பில் உள்ள பணிகளை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என தள்ளிப்போடாமல் உடனே முடிக்க முயற்சி செய்யுங்கள். இது உங்களது நிதிநிலைமையை சரி செய்ய உதவும். இல்லையெனில், வீண் சங்கடங்கள் வந்து சேரும்.

மகரம்
வெற்றி உங்களை சூழும் நாள். வெளிநாடுகளுக்கு செல்ல வாய்ப்பு கிடைக்கும். பணவரவு இருக்கும். பணியிடத்தில் ஆதிக்கம் செலுத்துவீர்கள். கிரக நிலைகள் உங்களுக்கு மகிழ்ச்சியை அள்ளி வீச காத்திருக்கிறது.

கும்பம்
சில சிக்கல்கள் குறுக்கிட்டாலும், பாதிப்பு பெரிதாக இருக்காது. பலவிதமான தொல்லைகள் உங்களின் நிம்மதியை கேள்விக்குறியாக்கலாம். ஆனால், கிரக அமைப்பு உங்களை பாதுகாக்கிறது. விநாயகர் வழிபாடு அவசியம்.

மீனம்
நீங்கள் பணி செய்யும் இடங்களில், உங்களை தொந்தரவு செய்யும், உங்களை எரிச்சல் அடையச் செய்யும் நபர்களை சந்திக்க நேரிடும். அதனை தவிர்க்க முயலுங்கள். முயன்றால், விலகிச் செல்லுங்கள்.

Advertisements

Leave a Reply