Home ஜோதிடம் இன்றைய ராசிபலன் – 02.12.2019

இன்றைய ராசிபலன் – 02.12.2019

212
0

மேஷம்
பாசிட்டிவான விமர்சனங்களை ஏற்றுக் கொள்ளுங்கள். ஏனெனில், உங்களை அது அடுத்தக் கட்டத்திற்கு இட்டுச் செல்லும். உங்களை தெளிவாக புரிந்து கொண்டோர் உங்களை அதிகம் விமர்சிப்பார்கள் என்பதையும் மறக்க வேண்டாம்.

ரிஷபம்
ஒவ்வொருமுறை முறையும் நாளைக்கு விடிவுகாலம் பிறந்துவிடும், இன்று விடிவுகாலம் பிறந்துவிடும் என்று நினைத்திருப்பீர்கள். காலதாமதம் ஆனாலும், முடிவு உங்களுக்கு சாதகமாவே வர காத்திருக்கிறது. போட்டித் தேர்வுகளில் உங்களுக்கு சாதகமான முடிவுகள் கிடைக்கலாம்.

மிதுனம்
உங்கள் விருப்பங்கள் அதிகரிக்கின்றதே தவிர, அதற்கேற்ப உழைப்பு உங்களிடம் இல்லையே, இதனை என்றாவது யோசித்து இருக்கீர்களா?. பெற்றோர்களை நோகச் செய்து நீங்கள் செய்யும் எந்த செயலும் வெற்றிப் பெறாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

கடகம்
உங்கள் இலக்கை நோக்கி தெளிவாக பயணிப்பீர்கள். ஆனால், வதந்திகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமல் செயல்பட்டால் சிறப்பாக இருக்கும். நட்புகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில் உங்களை அடித்துக் கொள்ள ஆளே கிடையாது.

சிம்மம்
முள்ளை முள்ளால் தான் எடுக்க முடியும். இதற்கு நீங்கள் மட்டும் விதிவிலக்கல்ல. நம்பிக்கையுடன் செயல்படுங்கள். எல்லாவற்றிற்கும் சந்தேகம் வேண்டாம். நிலையான முடிவை எடுக்க தடுமாறுவீர்கள். அந்த நிலை மாறும்.

கன்னி
உங்களை பழைய நண்பர்களை பார்க்கும் வாய்ப்பு கிட்டும். பார்க்கும் அனைவரையும், அனைத்து செயல்களையும் சந்தேக்கப்பட வேண்டாம். அதேபோல், நீங்கள் செய்யும் செயலைக் கூட வெற்றிப் பெறுமா என சந்தேகிக்க வேண்டாம். அதுவே உங்கள் தோல்விக்கு முதல் காரணமாகிவிடும்.

துலாம்
எதிர்பார்க்காத வரவுகள் உங்களை மகிழ்விக்கும். அதேசமயம், சந்திரன் உங்கள் ராசியில் சில குழப்பங்களை விளைவிக்கும். எனவே, கடவுள் வழிபாடு அவசியம். குறைந்த பட்சம் உங்களைச் சுற்றும் சிறிய பிரச்சனைகளாவது அகலும். உங்கள் குடும்பத்தினரோடு சேர்ந்து ஆலோசித்து செயல்படும் பட்சத்தில், சில தொல்லைகளை தவிர்க்கலாம்.

விருச்சிகம்
வலிமையான கிரக நிலைகள் நீடிக்கும். அதேபோல், உங்களது முன்னேற்றத்திலும் எந்த குறையும் இருக்காது. சில சிக்கல்கள் நீடித்தாலும், அடுத்தடுத்த வாரங்களில் அதுவும் குறைந்து போகும். சனிக் கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு விளக்கு போட்டு வணங்கி வாருங்கள்.

தனுசு
நிதி நிலைமை மேலும் மோசமாகும். வீட்டின் கூரையின் மேல் உட்கார்ந்து தீர்வு என்ன என்பதை யோசிப்பீர்கள். ஆனால், செயலற்ற தன்மையில் இருக்கும் நீங்கள் பெரிதளவில் ரிஸ்க் எடுக்க விரும்பமாட்டீர்கள். இருப்பினும், நீங்கள் அதிகம் விரும்பும் நபருக்காக கணக்கு பார்க்காமல் செலவு செய்வீர்கள்.

மகரம்
உங்கள் ஆற்றலை எங்கே பயன்படுத்த வேண்டும் என சிந்திக்க வேண்டும். உண்மையை வைத்து மட்டும் நிகழ் கேள்விகளுக்கு விடை காண முடியாது. பணியிடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். வீண் வதந்திகளை நம்ப வேண்டாம். அதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம்.

கும்பம்
எதிர்பாராத பணவரவுடன், திடீர் செலவுகளும் ஏற்படும். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். நண்பர்கள் கேட்கும் உதவியை மகிழ்ச்சியுடன் செய்து தருவீர்கள். தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள்.

மீனம்
குழப்பங்களும், ஆர்வத் தூண்டுதலும் ஒரு சேர கலந்திருக்கும். இதுவே, உங்களை உடனே முன்னேற்றிக் கொள்ள தேவையான அடிப்படை என்பதை சிந்திக்க வைக்கும். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் தோல்வியுற்றாலும், அதை நினைத்து வருந்த வேண்டாம்.

Advertisements

Leave a Reply