Home ஜோதிடம் இன்றைய ராசிபலன் – 18.11.2019

இன்றைய ராசிபலன் – 18.11.2019

197
0

மேஷம்
வாழ்க்கை பாதை எப்படி இருந்தாலும் பரவாயில்லை. வார இறுதியில் தலைவலியே மிஞ்சும். எமோஷனல் டென்ஷனும் ஏற்படும். உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள இலக்குகளை, தெளிவான பார்வையுடன் அணுக முயற்சிப்பீர்கள்.

ரிஷபம்
உங்களுக்கு தொடர்ச்சியான பாராட்டுகள் கிடைக்கும். அதனை அனுபவிக்க, உங்களே நீங்களே அனுமதித்தால், கடினமான வேலை விரைவில் முடியும். உங்கள் கட்டத்தில் வெள்ளி ஆதிக்கம் செலுத்துவதால், உங்கள் தனித்துவ குணத்தை உங்கள் துணை அறிந்து கொள்வார்.

மிதுனம்
சந்திரனின் ஆதிக்கம் உங்களுக்கு இருப்பதால், உங்களைச் சுற்றியுள்ள பிரச்சனைகளை எளிதாக சமாளிப்பீர்கள். குறைந்தபட்சம் இந்த வார இறுதி வரையாவது சமாளிப்பீர்கள். பழைய நட்புகள் உங்களுக்கு ஆதரவு கொடுப்பார்கள். யாரை நம்பலாம் என இப்போது நீங்கள் தெரிந்து கொள்வீர்கள்.

கடகம்
சமீபத்தில் நடந்த சம்பவங்கள் அனைத்தும் ஆட்டத்தின் விதிமுறையை மாற்றவே. ஆகையால மற்றவர்களை குறை சொல்லாதீர்கள். உங்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்று நீங்கள் தான் கோல் போஸ்ட்டை மாற்றி வைத்தீர்கள்.

சிம்மம்
நிலவில் ஆதிக்கம் இருப்பதால், கனவுகள் மேம்படும், எண்ணங்கள் அடுத்தக் கட்டத்திற்கு செல்லும். இன்று உங்கள் பார்வையை மாற்றுவீர்கள். இறுதியில், ஒரு அதிசயம் நடந்து உங்களை மகிழ்ச்சிப்படுத்தும்.

கன்னி
உங்களது நம்பிக்கையை யாராலும் அசைத்துப் பார்க்க முடியாது. ஏனெனில், நீங்களே உங்கள் தன்னம்பிக்கை மீது சந்தேகம் கொள்வீர்கள். முதலில் உங்களுக்கென ஒரு இலக்கை நிர்ணயித்து பயணம் செய்யுங்கள். அதற்காக அவசரப்பட வேண்டாம். நிதானமாகவே பயணப்படலாம்.

துலாம்
உங்கள் தனிப்பட்ட விருப்பங்கள் இந்த வாரம் வெற்றிகரமாக நிறைவேறும். இந்த வாரம் முழுவதும், உங்களது சிறப்பான செயல்களால் குடும்பத்தின் பாராட்டுகளையும், நம்பிக்கையையும் பெறுவீர்கள்.

விருச்சிகம்
ப்ளூட்டோ நிலையற்ற கிரகமாகும். ஆனால், அவ்வப்போது சில நன்மைகளை அளிக்கும். இந்த கிரகத்தால், இந்த வாரம் உங்களது நம்பிக்கை மிகவும் மேலோங்கி காணப்படும். அளவற்ற சக்தி பெற்றது போன்று உணருவீர்கள்.

தனுசு
வியாழன் உங்களின் ஆதிக்க கிரகம் இன்னமும் அதிக சக்தியுடன் இருக்கிறது. ஆகையால், நீங்கள் விரும்பும் அனைத்து பாதுகாப்பும் உங்களுக்கு கிடைக்கும். இருந்தாலும், ரிஸ்க் எடுக்க இதுதான் உகந்த நேரம் என்று நான் சொல்ல மாட்டேன். நீங்கள் சிறந்த சூதாடியாக இருந்தால், ஒரு செயலை செய்வதற்கு முன், முடிவு என்ன என்பதை தெரிந்திருக்க வேண்டும்.

மகரம்
நீங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் பணி ரீதியிலோ, கல்வி ரீதியிலோ ஒரு மாற்றம் வந்தே தீரும். உங்கள் வாழ்க்கை நலனுக்காக அதை நீங்கள் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். இருப்பினும், நீங்கள் உங்கள் பார்ட்னர்களை நிச்சயம் நம்பலாம்.

கும்பம்
உங்கள் தனிப்பட்ட விருப்பங்களை நிறைவேற்ற கட்டாய ஓய்வு உங்களுக்கு தேவை. உங்கள் நிதிச் சுமையை திறமையாக கையாள வேண்டிய சூழலில் நீங்கள் உள்ளீர்கள் என்பதை மறக்க வேண்டாம்.

மீனம்
புதன் உங்கள் கிரகத்தில் இருந்து விலகுவது என்பது, உங்கள் வாய்ப்புகளுக்கு இன்னும் சில காலங்களே மீதமுள்ள என்பதை உணர்த்துகிறது. குறிப்பாக, உங்கள் தேர்வுகள், நேர்காணல்கள் உள்ளிட்ட பிஸ்னஸ் புரபோசல்களை கூட இரண்டு வாரத்தில் நிறைவேற்றி விடுங்கள். இன்று மிக முக்கியம் என்னவெனில், சந்திரன் உங்கள் எமோஷன்களை விறைப்பாகவே வைத்திருக்க உதவுகிறது என்பதே.

Advertisements

Leave a Reply