Home ஜோதிடம் இன்றைய ராசிபலன் – 13.11.2019

இன்றைய ராசிபலன் – 13.11.2019

188
0

மேஷம்
பயணங்கள் மற்றும் வெளிவட்டார தொடர்புகளினால் புதிய உறவுகள் கிடைக்கும்.எதிர்கால வாழ்க்கைக்காக முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த நாள்.

ரிஷபம்
அனுபவங்கள் மற்றும் கருத்துக்களை பிறருடன் பகிர்ந்து கொள்வீர்கள். சிறு தொலைவு பயணங்களை மேற்கொள்வீர்கள். விருந்தினர் வருகையால் உற்சாகம் அதிகரிக்கும்.

மிதுனம்
நிதிவிவகாரங்கள் திருப்திகரமாக இருக்கும். புதிய சொத்துக்களை வாங்குவீர்கள். வீண் விரய வாய்ப்பு இருப்பதால் கவனம் அவசியம்

கடகம்
புதுமுயற்சிகளில் வெற்றி கிடைக்கும். நினைத்தது நடக்கும் என்பதால் மனமகிழ்ச்சியுடன் இருப்பீர்கள். பணியாளர்களுக்கு நிறுவனத்தில் நற்பெயர் கிடைக்கும்.

சிம்மம்
சிறப்பான நாள். முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். புதிய முயற்சிகளில் வெற்றிகள் கிடைக்கும். விருந்து, விசேஷங்களில் பங்கேற்பதால் மகிழ்ச்சியான மனநிலையில் இருப்பீர்கள்.

கன்னி
தேவையில்லாததை சிந்தித்தால் மனக்குழப்பம் தான் ஏற்படும் என்பதை உணர்வீர்கள். பின்விளைவுகளை உணர்ந்து முடிவெடுப்பது நல்லது. மகிழ்ச்சியான நாள்.

துலாம்
நேராக நிற்கும் மரம் விரைவில் வெட்டப்படும். இதேபோல் தான் மனித வாழ்க்கையும். வளைந்து கொடுத்து வாழ்வதால் மட்டுமே வாழ்வு சிறக்கும் என்பதை உணர்வீர்கள். அந்நியர்கள் – பிரியமானவர்களிடையேயான பந்தத்தை நினைத்து குழப்பீக்கொள்வீர்கள்.

விருச்சிகம்
எண்ணிய காரியங்கள் நிறைவேறும் பொருட்டு, எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் வரும். செயல்களில் நேர்த்தி நிறைந்திருக்கும்.நிதிவிவகாரங்கள் மகிழ்ச்சி தரும்.

தனுசு
உங்களது கருத்துகளுக்கு மற்றவர்கள் மதிப்பளிப்பார்கள். பொதுநலமாக இருப்பீர்கள். தொழில்சார்ந்த விசயங்களில் முன்னேற்றமான நிலை ஏற்படும். மகிழ்ச்சியான நாள்.

மகரம்
பொது விசயங்களில் அதிக அக்கறை காட்டுவீர்கள். செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்கவும் தயங்கமாட்டீர்கள்.பிரியமானவர்களுக்காக எதையும் செய்வீர்கள்.

கும்பம்
ஓய்வான நாள். எதிர்கால வாழ்க்கைக்காக பின்விளைவுகளை ஆராய்ந்து திட்டமிடுவீர்கள். தகவல்கள் சேகரிப்பில் அதீத அக்கறை காட்டுவீர்கள்.

மீனம்
சுயமுன்னேற்றத்திற்காக நேரத்தை செலவிடுவீர்கள். மற்றவர்களுக்கு சிறப்பாக தெரியவேண்டுமென்று நினைத்து அதற்காக மெனக்கெடுவீர்கள்.

Advertisements

Leave a Reply