மேஷம்
நிதிவிவகாரங்கள் திருப்திகரமாக இருக்கும். புதிய சொத்துக்களை வாங்குவீர்கள். வீண் விரய வாய்ப்பு இருப்பதால் கவனம் அவசியம்.
ரிஷபம்
அனுபவங்கள் மற்றும் கருத்துக்களை பிறருடன் பகிர்ந்து கொள்வீர்கள். சிறு தொலைவு பயணங்களை மேற்கொள்வீர்கள். விருந்தினர் வருகையால் உற்சாகம் அதிகரிக்கும்.
மிதுனம்
பயணங்கள் மற்றும் வெளிவட்டார தொடர்புகளினால் புதிய உறவுகள் கிடைக்கும்.எதிர்கால வாழ்க்கைக்காக முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த நாள்.
கடகம்
புதுமுயற்சிகளில் வெற்றி கிடைக்கும். நினைத்தது நடக்கும் என்பதால் மனமகிழ்ச்சியுடன் இருப்பீர்கள். பணியாளர்களுக்கு நிறுவனத்தில் நற்பெயர் கிடைக்கும்.
சிம்மம்
முக்கிய விவகாரங்களிலிருந்து விலகி செல்வீர்கள். தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருக்க விரும்புவீர்கள். விருந்து, விசேஷங்களில் பங்கேற்பதால் மனமகிழ்ச்சியுடன் இருப்பீர்கள்.
கன்னி
மற்றவர்களின் ஆதரவை பெற கடும் பிரயத்தனம் மேற்கொள்ள வேண்டியிருக்கும். முன்னெச்சரிக்கையுடன் நடந்துகொள்வது நல்லது. வாகன போக்குவரத்தில் கவனம் அவசியம்.
துலாம்
உறவுகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பீர்கள். கிரகங்கள் சாதகமான இடத்தில் உள்ளதால், எண்ணிய காரியங்கள் ஈடேறும். நிதிவிவகாரங்களில் அதிக கவனம் வேண்டும்.
விருச்சிகம்
மனக்குழப்பங்கள் அதிகரிக்கும் நாள்.பணிச்சுமையால் அவதிப்படுவீர்கள். நினைத்தது ஒன்று நடப்பது ஒன்று ஆக இருக்கும்..
தனுசு
நிதி விவகாரங்களில் முக்கிய முடிவுகள் மேற்கொள்வீர்கள். சட்ட விவிகாரங்களில் சாதகமான போக்கு காணப்படும். வெளிவட்டார தொடர்பு நற்பலனை தரும்.
மகரம்
மனமகிழ்ச்சியுடன் இருப்பீர்கள். புதிய ஐடியாக்களை அமல்படுத்துவீர்கள். தலைமை ஏற்று சில நிகழ்ச்சிகளை நடத்துவீர்கள். சிறப்பான நாள்.
கும்பம்
எதிர்பாராத திருப்பங்களை சந்திப்பீர்கள். பிறரால் பாராட்டப்படுவீர்கள். இலக்கை நோக்கிய பயணம் வெற்றிகரமாக அமையும். விரயத்தை தவிர்ப்பீர்.
மீனம்
சிறப்பான நாள். முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். புதிய முயற்சிகளில் வெற்றிகள் கிடைக்கும். விருந்து, விசேஷங்களில் பங்கேற்பதால் மகிழ்ச்சியான மனநிலையில் இருப்பீர்கள்.