மேஷம்
கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்த நீங்கள் அதன் மகத்துவத்தை மற்றவர்களுக்கும் வலியுறுத்துவீர்கள். எது சரி எது தவறு என்பதை ஆராய்ந்து உணர்வீர்கள். மகிழ்ச்சியான நாள்.
ரிஷபம்
பிரியமானவர்களுடன் பேசி பொழுதை இனிமையாக கழிப்பீர்கள். உங்கள் கருத்தை மற்றவர்கள் தவறாக புரிந்துகொள்ள வாய்ப்பு இருப்பதால், வார்த்தைகளில் நிதானம் கடைபிடிப்பது அவசியம்.
மிதுனம்
ஷாப்பிங் செய்வீர்கள். அதன்காரணமாக மனஅமைதி ஏற்படுவதை உணர்வீர்கள். போட்டி, பந்தயங்களில் வெற்றி கிடைக்கும். கடன்களை அடைப்பீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.
கடகம்
பணியிடங்களில் மதிப்பு அதிகரிக்கும். அங்கீகாரம் கிடைக்கும். சந்தோஷமாக உணர்வீர்கள். பெரிய பெரிய ஐடியாக்களை நடைமுறைப்படுத்த முனைவீர்கள். மகிழ்ச்சியான நாள்.
சிம்மம்
எண்ணிய காரியங்கள் நினைத்தபடி நடக்கும். எதையும் சிறப்பாக செய்யவேண்டும் என்பதற்காக அதிகம் மெனக்கெடுவீர்கள். புதிய நட்புகள் கிடைக்கும். பிரியமானவர்களுடன் பொழுதை கழிப்பீர்கள்.
கன்னி
மன திடத்துடன் இருப்பீர்கள். மற்றவர்கள் செய்ய தயங்கும் செயல்களை அனாசயமாக செய்து முடிப்பீர்கள். ரொமான்ஸ் விசயங்களில் அதிக ஈடுபாடு கொள்வீர்கள்.
துலாம்
முக்கிய நண்பர்களை சந்திப்பீர்கள். அவரது சந்திப்பினால், வாழ்க்கையில் முக்கிய மாற்றங்களை எதிர்கொள்வீர்கள். யதார்த்த நடவடிக்கைகளுக்காக பலரை ஒதுக்கும் நிலை ஏற்படும்.
விருச்சிகம்
ஏற்றத்தாழ்வுகள் நிறைந்தது தான் வாழ்க்கை என்பதை உணர்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் கோபம் வரும்படி நடந்துகொள்வர் என்பதால், வார்த்தைகளில் நிதானம் காப்பது நல்லது. புதிய முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள்.
தனுசு
தொழில்முறை விவகாரங்கள் திருப்தியளிக்கும். நிதிவிவகாரங்களில் வெற்றி கிடைக்கும். புதிய சொத்துக்களை வாங்குவீர்கள். மகிழ்ச்சியான நாள்.
மகரம்
திருமண முயற்சிகள் பலிதமாகும். கணவன் – மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். வாகன போக்குவரத்தில் அதிக கவனம் தேவை.
கும்பம்
புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். போட்டி, பந்தயங்களில் வெற்றி பெறுவீர்கள். அனைத்து தரப்பினராலும் பாராட்டப்படுவீர்கள். மகிழ்ச்சியான நாள்.
மீனம்
ஆடம்பரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பீர்கள். யதார்த்த வாழ்க்கையிலிருந்து விலகி செல்வீர்கள். புதுவித அனுபவங்கள் ஏற்படும்.