Home ஜோதிடம் இன்றைய ராசிபலன் – 07.11.2019

இன்றைய ராசிபலன் – 07.11.2019

227
0

மேஷம்
ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாது என்பதை உணர்ந்த நீங்கள் மற்றவர்களுக்கும் வலியுறுத்துவீர்கள். எது தவறு எது சரி என்பதை உணர்வீர்கள். முக்கிய முடிவுகளை எடுப்பதில் கவனம் அவசியம்.

ரிஷபம்
பணியிடங்கள் மற்றும் தாங்கள் இருக்கும் இடங்களில், கிரகங்களின் சாதகமான பார்வையினால் உங்களின் மதிப்பு அதிகரிக்கும். எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவீர்கள், மகிழ்ச்சியான நாள்.

மிதுனம்
வெளிவட்டார தொடர்புகள் அதிகரிக்கும்.முன்வைத்த காலை பின்வைக்க மாட்டீர்கள். கற்பனை வேறு, நடப்பு வேறு என்பதை உணர்வீர்கள்.

கடகம்
நிதிவிவகாரங்களில் அதிக கவனம் அவசியம். பென்சன், சேமிப்பு உள்ளிட்ட விவகாரங்களில் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து நிதானித்து முடிவெடுப்பது நல்லது. பிரியமானவர்களுடன் பொழுதை கழிப்பீர்கள்.

சிம்மம்
பிரியமானவர்களுக்காக அதிக சிரத்தை எடுத்துக்கொள்வீர்கள். உணவு நடைமுறையில் அதிக கவனம் கொள்வது நல்லது.

கன்னி
தேவையில்லாததை சிந்தித்தால் மனக்குழப்பம் தான் ஏற்படும் என்பதை உணர்வீர்கள். பின்விளைவுகளை உணர்ந்து முடிவெடுப்பது நல்லது. மகிழ்ச்சியான நாள்.

துலாம்
நேராக நிற்கும் மரம் விரைவில் வெட்டப்படும். இதேபோல் தான் மனித வாழ்க்கையும். வளைந்து கொடுத்து வாழ்வதால் மட்டுமே வாழ்வு சிறக்கும் என்பதை உணர்வீர்கள். அந்நியர்கள் – பிரியமானவர்களிடையேயான பந்தத்தை நினைத்து குழப்பீக்கொள்வீர்கள்.

விருச்சிகம்
எண்ணிய காரியங்கள் நிறைவேறும் பொருட்டு, எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் வரும். செயல்களில் நேர்த்தி நிறைந்திருக்கும்.நிதிவிவகாரங்கள் மகிழ்ச்சி தரும்.

தனுசு
உங்களது கருத்துகளுக்கு மற்றவர்கள் மதிப்பளிப்பார்கள். பொதுநலமாக இருப்பீர்கள். தொழில்சார்ந்த விசயங்களில் முன்னேற்றமான நிலை ஏற்படும். மகிழ்ச்சியான நாள்.

மகரம்
பொது விசயங்களில் அதிக அக்கறை காட்டுவீர்கள். செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்கவும் தயங்கமாட்டீர்கள்.பிரியமானவர்களுக்காக எதையும் செய்வீர்கள்.

கும்பம்
ஓய்வான நாள். எதிர்கால வாழ்க்கைக்காக பின்விளைவுகளை ஆராய்ந்து திட்டமிடுவீர்கள். தகவல்கள் சேகரிப்பில் அதீத அக்கறை காட்டுவீர்கள்.

மீனம்
சுயமுன்னேற்றத்திற்காக நேரத்தை செலவிடுவீர்கள். மற்றவர்களுக்கு சிறப்பாக தெரியவேண்டுமென்று நினைத்து அதற்காக மெனக்கெடுவீர்கள்.

Advertisements

Leave a Reply