Home ஜோதிடம் இன்றைய ராசிபலன் – 31.10.2019

இன்றைய ராசிபலன் – 31.10.2019

289
0

மேஷம்
உங்கள் சொந்த பந்தங்களை முடிந்த அளவு தள்ளி வைப்பது உங்களுக்கு நல்லது. குறிப்பாக, பண விவகாரங்களில் நீங்களாக சென்று எந்த உத்தரவாதமும் கொடுக்க வேண்டாம். அதேசமயம், நண்பர்களின் ஆலோசனைகளையும் அளவோடு அனுமதியுங்கள்.

ரிஷபம்
உங்களது தன்னம்பிக்கை உங்களை அடுத்தக் கட்டத்திற்கு அழைத்துச் செல்லும், அதற்கு சில கடினமான காலங்களை நீங்கள் கடந்து வர வேண்டியது அவசியம். வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம். உங்கள் வேலையை மட்டும் பார்த்தால் நல்லது.

மிதுனம்
நீதிக்காக எப்போதும் போராடுவீர்கள். யாருக்காகவும் நேர்மையை விட்டுக் கொடுக்க மாட்டீர்கள். சில தோல்விகள் உங்களை உலுக்கினாலும், அதிலிருந்து எளிதில் மீண்டு வரும் வித்தையை கற்று வைத்திருப்பீர்கள்.

கடகம்
உங்கள் பணியை மேலும் பொறுப்புடன் செய்து முடிப்பீர்கள். உங்கள் மேலதிகாரிகளை அது திருப்திபடுத்தும். இனிமேல் தான் அதிகம் யோசிக்கத் தொடங்குவீர்கள். ஏன், எதற்கு, எப்படி என்று கேள்விக் கேட்கத் தொடங்குவீர்கள். லேட் பிக்கப் கடக ராசிக்காரர்களே வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள்.

சிம்மம்
அடுத்த இரண்டு நாட்களுக்கு வாகனப் போக்குவரத்தில் கவனம் தேவை நண்பர்களே. ஏறுமுகத்தில் இருக்கும் உங்கள் பாதையில் சில தடங்கள் ஏற்படலாம். கணிசமாக உங்கள் வெற்றி விகிதம் உயரும்.

கன்னி
அடுத்த சில நாட்களின் உங்கள் வாழ்க்கை முறை மாறும். சுதாரித்துக் கொள்வீர்கள். உடலை குறைப்பது கூட எவ்வளவு முக்கியம் என்பதை அறிந்து கொள்வீர்கள். கடக ராசிக்காரர்களை போல் நீங்களும் லேட் பிக்கப் தான்.

துலாம்
தனிமையில் உங்கள் வெற்றியை தேடாதீர்கள். அதற்கு பல கைகளின் உதவி வேண்டும். சில கடினமான தருணங்களை எதிர்கொண்டு பக்குவப்பட்டு இருப்பீர்கள். அதற்காக வெற்றி, வெற்றி என்று குரல் கொடுக்கக் கூடாது. வெளிநாடு யோகம் இருக்கிறது.

விருச்சிகம்
உங்களது சில சுயநல சிந்தனைகளால் தேவையில்லாத பேச்சுக்களை கேட்க வேண்டியிருக்கும். தவறான பழக்கவழக்கம் உங்களுக்கு வீழ்ச்சியாக அமையலாம். கிரக மாற்றங்களின் தன்மைக்கு ஏற்ப உங்கள் வெற்றி தீர்மானிக்கப்படும். மிகவும் சுமாரான நாள் இன்று.

தனுசு
குடும்பத்தினரிடம் உங்களுக்கு இருந்த மனக்கசப்புகள் நீங்கும். அடுத்து வரும் நாட்கள் உங்கள் முன்னேற்றத்தை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்லும். இருப்பினும், பணியிடத்தில் எச்சரிக்கையுடன் செயல்படுங்கள்.

மகரம்
எண்ணங்கள் உங்கள் வாழ்வை மேம்படுத்தும். நிதானமாக செயல்படுவது உங்கள் முன்னேற்றத்திற்கு உதவும். கல்வியால் உங்கள் தரம் உயரும். பிள்ளைகளின் நடவடிக்கைகளில் மாற்றம் தெரியும். அது நல்ல மாற்றமாக இருக்கும்.

கும்பம்
சமூகம் என்ன நினைக்கும் என்று கவலைப்பட்டு முடங்கிக் கிடக்க வேண்டாம். சிறிய சிறிய சறுக்கல்கள் உங்களுக்கு பாடமே தவிர, தோல்வி கிடையாது. எழுந்து ஓடுங்கள். தனியாத் தாகத்தை ஒரு சில முயற்சிகளில் தணித்துக் கொள்வீர்கள்.

மீனம்
பெற்றோர்களிடமும், உங்கள் மனைவியிடமும் அதிக நேரம் செலவு செய்வீர்கள். குடும்பத்தில் நிலவிய ஒருவித இறுக்கம் குறையும். பழைய நண்பர்களும் உங்களைத் தேடி வருவார்கள். உங்களையே புதிதாக நீங்கள் உணருவீர்கள்.

Advertisements

Leave a Reply