மேஷம்
கடின உழைப்பின் மூலம் தான் வெற்றி கிடைக்கும். இன்று நீங்கள் சுய முன்னேற்றத்திற்கான பாதையில் செல்வீர்கள். அதற்கு வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொள்வீர்கள். பணிநிமித்தமான பயணம் காணப்படுகின்றது. இது உங்களுக்கு பணியைப் பொறுத்தவரை பயனுள்ளதாக இருக்கும்.
ரிஷபம்
இன்று அனுகூலமான நாளாக இருக்கும். உங்கள் மனதில் நேர்மறையான எண்ணங்கள் காணப்படும். இதன் மூலம் நன்மைகள் நடக்கும். உங்களுக்கு கொடுத்த பணிகளை குறித்தநேரத்தில் முடிப்பீர்கள். சக பணியாளர்களின் ஆதரவு கிடைக்கும்.
மிதுனம்
இன்று நீங்கள் வருத்தத்துடனும் மன உளைச்சலுடனும் காணப்படுவீர்கள். உங்கள் திறமைகளை சிறந்த முறையில் பயன்படுத்தினால் முன்னேற்றம் கிட்டும். பங்கு வர்த்தகம் மூலம் நீங்கள் பணம் சம்பாதிக்கலாம். என்றாலும் உங்களால் அதிகமாக சேமிக்க இயலாது.
கடகம்
இன்று இழப்புகள் ஏற்படாத வகையில் கவனமாக நடந்து கொள்ள வேண்டும். பொறுமையாக இருக்க வேண்டும். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். வயிறு உப்பசம் காரணமாக அவதிப்பட நேரலாம். காரமான மற்றும் எண்ணெய் பதார்த்தங்கள் உண்பதை தவிர்க்கவும். உடல் நலனில் அக்கறை தேவை.
சிம்மம்
இன்று உங்கள் செயல்களில் மும்மரமாக இருப்பீர்கள். உங்கள் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். இன்றைய நாளை முக்கிய முடிவுகள் எடுக்க பயன்படுத்திக் கொள்வீர்கள். இன்று பண வரவு காணப்படும். பணத்தை சேமிப்பீர்கள். ஆரோக்கியம் சிறப்பாக காணப்படும். இந்த நாளை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
கன்னி
துணிச்சலாக சிலமுக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். அரசால் ஆதாயம் உண்டு.வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். தைரியம் கூடும் நாள்.
துலாம்
கடந்த இரண்டு நாட்களாக இருந்த மன உளைச்சல் நீங்கி எதிலும் ஒருதெளிவு பிறக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். உற்சாகமான நாள்.
விருச்சிகம்
வேலைச்சுமை இருந்துக் கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். குடும்பத்தில் சண்டை, சச்சரவு வந்து நீங்கும். அவசரப்பட்டு அடுத்தவர்களை விமர்சிக்க வேண்டாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்யோகத்தில் மறைமுக அவமானம் ஏற்படக்கூடும். விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நாள்.
தனுசு
குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவது நல்லது. வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். உறவினர், நண்பர்கள் சிலர் பணம் கேட்டு தொந்தரவு தருவார்கள். அரசு காரியங்கள் இழுபறியாகும். வியாபாரத்தில் ஒரளவு லாபம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களுடன் மோதல்கள் வேண்டாமே. தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.
மகரம்
எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும். பிள்ளைகளால் சொந்த-பந்தங்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையை புரிந்து கொள்வீர்கள். உத்யோகத்தில் சில புதுமைகளை செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். சிறப்பான நாள்.
கும்பம்
கணவன்-மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். பாதியில் நின்ற வேலைகள் முடிவடையும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். தாழ்வு மனப்பான்மையிலிருந்து விடுபடுவீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். புதிய பாதை தெரியும் நாள்.
மீனம்
கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். பிரபலங்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் வரவு கணிசமாக உயரும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்ததை முடிப்பீர்கள். சாதிக்கும் நாள்.