மேஷம்
எதிர்கால வாழ்வுக்காக அசாத்திய முடிவுகளை எடுப்பீர்கள். பல்வேறு தடைகளை முறியடிப்பீர்கள்.. உங்களுள் ஒளிந்துள்ள திறமைகள் வெளிப்படும். வேறுபாடுகளை களைவீர்கள்.
ரிஷபம்
மகிழ்ச்சியான நாள். மனம் விரும்பியவர்களுடன் அதிக நேரத்தை செலவழிப்பீர்கள். விருந்து, விசேஷங்களில் பங்கேற்பீர்கள்.
மிதுனம்
எதையும் ஒன்றுக்கு பலமுறை கலந்தோலோசித்து முடிவு எடுப்பது நல்லது. நிதி விவகாரங்களில் நினைத்தது ஒன்று நடப்பது ஒன்று ஆக இருக்கும். பின்விளைவுகள் பற்றி ஆராய்ந்து செயல்களை துவங்குவது நல்லது.
கடகம்
தவிர்க்கமுடியாத இடர்பாடுகளால் அவதியுறுவீர்கள். அகலக்கால் வைக்காமல் இருப்பது நல்லது. மனஅமைதிக்கு தியானம் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம்.
சிம்மம்
கிரகங்களின் சாதகமான பார்வையினால், எண்ணிய காரியங்கள் எண்ணியபடி ஈடேறும். வீண் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. போட்டி, பந்தயங்களில் வெற்றி பெறுவீர்கள்.
கன்னி
பணியிடங்களில் நன்மதிப்பு பெறுவீர்கள். புன்னகையினால் அனைத்து காரியங்களையும் சாதிப்பீர்கள். மற்றவர்களால் பாராட்டப்படுவீர்கள்.
துலாம்
எதிர்கால வாழ்வுக்காக, பல்வேறு திட்டங்களை தீட்டுவீர்கள். தோல்வி எனும் தடைக்கற்களை படிக்கற்களாக மாற்றி வெற்றிநடை போடுவீர்கள். எதிலும் சமரசம் செய்துகொள்ள மாட்டீர்கள்.
விருச்சிகம்
மகிழ்ச்சியான நாள். நட்புறவில் இன்பம் காண்பீர்கள். கணவன் – மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். எதிர்படும் தடைகளை வெல்வீர்கள். விருந்து, விசேஷங்களில் பங்கேற்பீர்கள்.
தனுசு
நடப்பவை நன்மைக்கே என்பதை உணர்வீர்கள். மற்றவர்களால் பாராட்டப்படுவீர்கள். வழக்கமான பணிகளிலிருந்து விடுபட்டு செல்வீர்கள்.
மகரம்
கடந்தகால இழப்புகளை நினைத்து துயரம் அடைவீர்கள். எதிர்காலத்தில் வெற்றி பெறுவதற்கான வழிமுறை குறித்து திட்டமிடுவீர்கள். சவால்களை குழுவாக சமாளிப்பீர்கள்.
கும்பம்
நண்பர்கள் மற்றும் உறவினர்களிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். நட்புக்கு மதிப்பு அளிப்பீர்கள். காதல் வயப்படுவீர்கள். வார்த்தைகளில் நிதானம் அவசியம்.
மீனம்
தகவல் தொடர்பு எதிர்பார்த்த பலனை தரும். விரும்பிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். மனதில் உற்சாகம் பிறக்கும். மகிழ்ச்சியான நாள்.