மேஷம்
தொழில்முறை விவகாரங்களில் வார்த்தைகளில் கவனம் அவசியம். எதிர்பாராத விளைவுகளை எதிர்கொள்ள தயாராகுங்கள். மனசஞ்சலத்திற்கு ஆளாவீர்கள் என்பதால் நிதானமாக செயல்படவும்.
ரிஷபம்
கிரகங்களின் சாதகமான பார்வையினால் எண்ணிய காரியங்கள் ஈடேறும். மனைவியின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். புதிய பொறுப்புகளை ஏற்பீர்கள்.
மிதுனம்
மகிழ்ச்சியான நாள். மற்றவர்களை மன்னிப்பீர்கள். பழிவாங்கும் எண்ணங்களிலிருந்து விடுபடுவீர்கள். விருந்து, விசேஷங்களில் பங்கேற்பீர்கள்.
கடகம்
குடும்ப உறுப்பினர்களின் கோப பார்வைக்கு ஆளாவீர்கள். எதிலும் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்காததால் மனசஞ்சலம் அடைவீர்கள். வார்த்தைகளில் நிதானம் அவசியம்.
சிம்மம்
கடந்தகால அனுபவங்களிலிருந்து புதிய பாடம் கற்றுக்கொள்வீர்கள். மற்றவர்களிடமிருந்து உரிய மரியாதை கிடைக்கப்பெறுவீர்கள். எதிர்கால நலனுக்காக திட்டமிட்டு செயல்படுவீர்கள்.
கன்னி
நேர்மறையாக இருப்பதன் அவசியத்தை உணர்வீர்கள். பொதுநல நோக்குடன் செயல்படுவீர்கள். வாகன போக்குவரத்தில் நிதானம் அவசியம்.
துலாம்
திட்டமிட்ட காரியங்களில் மாற்றங்களை செய்வீர்கள். நிதிவிவகாரங்களில் அதிக கவனம் செலுத்துவீர்கள். மற்றவர்களுடன் சேர்ந்து செய்யும் தொழில் லாபகரமாக அமையும்.
விருச்சிகம்
தக்க சமயங்களில் மற்றவர்களின் உதவி, உங்களை மகிழ்விக்கும். கணவன் – மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும்.
தனுசு
கிரகங்களின் சாதகமான பார்வையினால், எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். கடினமான காரியங்களையும் எளிதாக செய்துமுடிப்பீர்கள். மகிழ்ச்சியான நாள்.
மகரம்
வீட்டை சீரமைப்பதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். குடும்ப உறுப்பினர்களுடன் மனம்விட்டு பேசுவீர்கள். விருந்து, விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள்.
கும்பம்
வீடு மற்றும் சமூகத்தில் நன்மதிப்பு பெறுவீர்கள். இடர்களை அகற்றி எதிர்கால வாழ்விற்காக திட்டமிட்டு செயல்படுவீர்கள். பழைய நினைவுகளை அசைபோடுவீர்கள்.
மீனம்
மகிழ்ச்சியான நாள். நிதி விவகாரங்கள் அதிக லாபத்தை தரும், விருந்து, விசேஷங்களில் பங்கேற்பால் மனம் மகிழ்ச்சியாக இருக்கும்.