Home ஜோதிடம் இன்றைய ராசிபலன் – 17.10.2019

இன்றைய ராசிபலன் – 17.10.2019

165
0

மேஷம்
விடா முயற்சி உங்களுக்கு இப்போது அவசியமாகிறது. உங்களுக்கான வாய்ப்பு உங்களை விட்டு இப்போது விலகிச் சென்றாலும், நிச்சயம் அது உங்களுக்காக விதிக்கப்பட்டவையே. ஆகையால் யார் என்ன சொன்னாலும், இந்த காதில் வாங்கி, அந்த காதில் விட்டு களத்தில் இறங்குங்கள்.

ரிஷபம்
உங்களுக்கான இந்த நாளில் உங்கள் தாயை வணங்கினால் அதுவே போதுமானது. அந்த ஈடு இணையற்ற சக்தியின் வலிமை உங்களை உச்சிக்கு கொண்டு செல்லும். அவர் காலில் விழுந்து வெளியே செல்லுங்கள். உங்களை சீண்ட வெளியே ஒரு ஆளும் கிடையாது.

மிதுனம்
நாளுக்கு நாள், வாரத்திற்கு வாரம் உங்கள் ராசி பலன் இம்ப்ரூவ் கண்டு வருகிறது. அதற்கு சாட்சி இன்றைய நாள். வெளிநாடு செல்லும் வாய்ப்பு உங்களுக்கு ஏற்படவிருக்கிறது. எதற்கும் தயாராகலாம். கவிதை எழுதுவதை தூர வைத்துவிட்டு, போருக்கு தயாராகுங்கள்.

கடகம்
உங்களின் தனிப்பட்ட குணாதிசயம் உங்களை பல தவறுகளில் இருந்து உங்களை காப்பாற்றும். உங்கள் துணையை ரொமான்டிக்காக மற்றும் அணுகாமல், அவருக்குள்ளும் மனம் இருக்கும் என்று நினைத்து செயல்படுங்கள். உங்களுக்கு இது சிரிப்பாக தோன்றினாலும், அதுவே உண்மை.

சிம்மம்
எல்லாவற்றையும் பெர்சனலாக எடுத்துக் கொள்ளாதீர்கள். அது உங்களை பல நேரங்களில் துன்பத்தில் வைத்திருக்கும். வழக்கத்தை விட பல சிக்கலான கேரக்டர்களை இனி வரும் நாட்களில் சந்திப்பீர்கள்.

கன்னி
உங்கள் கிரக நிலை அமைப்புகளால் பாதுகாப்பாக உணருவீர்கள். உங்கள் முடிவுகளை அருமையாக செதுக்கும் பக்குவம் ஏற்படும். உங்கள் பலம் அதிகரித்திருப்பது போன்று உணர்வீர்கள். ஆனால், உங்கள் முயற்சிக்கான நேரம் குறைவாகவே உள்ளது. எதையும் விரைந்து செயல்படுத்த முயற்சி செய்யுங்கள். முதலில் உங்கள் நிதி நிலையை சரி செய்யுங்கள்.

துலாம்
அலுவலகங்களில் உங்கள் மீதான மரியாதை அதிகரிக்கும். உங்களின் பழக்கவழக்கங்களில் நீங்களே மாற்றத்தை காண்பீர்கள். குடும்பத்தினரும் உங்களை நினைத்து மகிழ்ச்சி கொள்வார்கள். அது உங்கள் நம்பிக்கையை பல மடங்கு அதிகரிக்கும்.

விருச்சிகம்
நிதி நிலைமையில் சில சறுக்கல்களை சந்திப்பீர்கள். ஆகையால் உங்கள் திட்டங்கள் பலவற்றை செயல்படுத்த முடியாமல் திணறுவீர்கள். இருப்பினும், இந்த நிலைமை விரைவில் மாறும். கணிசமான தோல்விகளுக்கு பிறகு ஏற்றத்தை காண்பீர்கள்.

தனுசு
உங்கள் வயிற்றை விட, உங்கள் கண்கள் இப்போது அகலமாக விரியும். ஏனெனில், உங்களின் கற்பனை ஒவ்வொன்றும் அடுத்தடுத்து நிறைவேறும் போது, அதன் மகிழ்ச்சியான முடிவுகளை நீங்கள் சந்திக்க நேரும் தான். கடினமான பாதைகளை நீங்கள் கடந்து வந்து விட்டீர்கள். நோ டென்ஷன்.

மகரம்
நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் அப்போதே பிரதிபலனை அனுபவிப்பீர்கள் என்பதை மறந்துவிட வேண்டாம். விடாமல் உங்களை துரத்தும் சில சிக்கல்களுக்கும் அதுதான் காரணம் என்பதையும் மறக்க வேண்டாம். இருப்பினும், இன்று ஓரளவுக்கு நிம்மதியான நாள்.

கும்பம்
அனுகூலமான தருணங்கள் உங்களை நோக்கி வந்துக் கொண்டிருக்கின்றன. மகிழ்ச்சியை கொண்டாட தாமதம் வேண்டாம். உங்கள் நிமிடங்களை இனி நீங்களே அதிகாரம் செய்யலாம். யாரும் அதில் உள் நுழைய வேண்டாம்.

மீனம்
சரியான திசையை நோக்கி பயணம் செய்வீர்கள். ஆனால், கூடுதல் கவனம் தேவை. பெற்றோர்களை கருத்தை உதாசீனம் செய்ய வேண்டாம். தோல்விகளையும் பக்குவமாக அணுகும் நீங்கள், அதனை வெற்றியாக மாற்ற முயற்சிப்பதிலும் கூடுதல் உத்வேகத்தை உருவாக்குவது நல்லது.

Advertisements

Leave a Reply