Home ஜோதிடம் இன்றைய ராசிபலன் – 09.10.2019

இன்றைய ராசிபலன் – 09.10.2019

213
0

மேஷம்
பெர்சனல் விஷயங்களில் அதிக முன்னெச்சரிக்கை தேவை. உள்விவகாரங்களில் அஜாக்கிரதையாக இருப்பது தங்கள் தலையில் தாங்களாகவே மண்ணை அள்ளிப்போடுவதற்கு சமம். பிரச்னைகளிலிருந்து தற்காலிகமாக விலகிக்கொள்வீர்கள்.

ரிஷபம்
பயணம் செய்ய சிறந்தநாள். வெளிவட்டார தொடர்பு விரிவடையும். நண்பர்களிடையே நற்மதிப்பு பெறுவீர்கள். மகிழ்ச்சியான நாள்.

மிதுனம்
சமூகத்தில் நன்மதிப்பு பெறுவீர்கள். மற்றவர்கள் செய்ய தயங்கும் செயலை அனசாயமாக செய்து முடிப்பீர்கள். பிரியமானவர்களிடம் நட்பு பாராட்டுவீர்கள்.

கடகம்
மற்றவர்களின் கருத்துகள் மற்றும் செயல்களுக்கு மதிப்பு அளிப்பீர்கள். அவர்களிடமிருந்து பாடம் கற்றுக்கொள்வீர்கள். முக்கிய விஷயங்களுக்காக திட்டமிடுவீர்கள்.

சிம்மம்
பிரியமானவர்களுடன் பொழுதை கழிப்பீர்கள். மகிழ்ச்சியான நாள். விருந்து மற்றும் விசேஷங்களில் பங்கேற்பீர்கள்.

கன்னி
மகிழ்ச்சியான நாள். எதிர்கால வாழ்க்கைக்காக திட்டமிடுவீர்கள். தொட்டது துலங்கும். நிதிவிவகாரங்களில் எதிர்பார்த்த நன்மைகள் ஏற்படும்.

துலாம்
இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். தொழில்முறை விவகாரங்களில் முன்னேற்றம் காண்பீர்கள். பிரியமானவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.

விருச்சிகம்
செயல்களில் அதிக கவனம் அவசியம். தடுமாற்றம் ஏற்படும் என்பதால், மன சஞ்சலத்தை தவிர்ப்பீர். மனஅமைதிக்கு தியானம் அவசியம். வார்த்தைகளில் நிதானத்தை பின்பற்றவும்.

தனுசு
வாழ்வில் இழந்ததை நினைத்து கவலை கொள்வீர்கள். மறைந்திருந்த திறமைகள் வெளிப்படும். மன சஞ்சலம் தீர்க்க நண்பர்களுடன் பொழுதை போக்குவீர்கள்.

மகரம்
பிறருக்காக விட்டுக்கொடுத்து செல்வீர்கள். சொல்ல வந்த விஷயங்களை பிறருடன் பகிர்வதில் சிரமப்படுவீர்கள். வாகனப்போக்குவரத்தில் கவனம் அவசியம்.

கும்பம்
கிரகங்களின் சாதகமான பார்வையினால், குடும்பத்தில் அதிகளவு மாற்றங்களை எதிர்பார்ப்பீர்கள். எதிர்கால வாழ்க்கைக்காக திட்டமிடுவீர்கள். நிதிவிவகாரங்களில் அதிக கவனம் எடுத்துக்கொள்வீர்கள்.

மீனம்
திறமையுடன் செயல்பட்டு மற்றவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். வருமானம் அதிகரிக்கும். விருந்து விசேஷங்களில் பங்கேற்பீர்கள்.

Advertisements

Leave a Reply