Home செய்திகள் TNPSC குரூப்-4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு

TNPSC குரூப்-4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு

310
0

டி.என்.பி.எஸ்.சி குரூப் -4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் இணையத்தில் வெளியிடப்பட்டது.

மொத்தம் 6 ஆயிரத்து 491 காலிப் பணியிடங்கள் குரூப் 4 தேர்வு மூலமாக நிரப்பப்பட உள்ளன. tnpsc.gov.intnpscexams.net அல்லது tnpscexams.in என்ற இணைய தளங்களில் ஹால் டிக்கெட்டுகளை டவுண்லோட் செய்து கொள்ள முடியும்.

ஒருவேளை ஹால் டிக்கெட் இல்லை கிடைக்கவில்லை என்றால் தேர்வாளர்கள் தேர்வு கட்டணம் செலுத்திய ரசீதின் நகலை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். ஹால் டிக்கெட் தொடர்பாக ஆக.28 ம் தேதிக்கு பிறகு வரும் கோரிக்கைகள் ஏற்கப்படமாட்டாது என்று அந்த குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 மணி நேரம் நடைபெறும் இந்த தேர்வு 300 மதிப்பெண்களை கொண்டது. இதில் தேர்ச்சி பெற குறைந்தது 90 மதிப்பெண்களாவது எடுக்க  வேண்டும். பொதுத் தமிழ் அல்லது ஆங்கிலம், பொது அறிவு பாடப் பகுதிகளில் இருந்து மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்படும்.

Advertisements

Leave a Reply