Home செய்திகள் உலக செய்திகள் இளம்பெண்ணை கற்பழித்து கொன்ற காமக்கொடூரனுக்கு தூக்கு தண்டனை

இளம்பெண்ணை கற்பழித்து கொன்ற காமக்கொடூரனுக்கு தூக்கு தண்டனை

169
0

வில்லேபார்லேயில் இளம்பெண்ணை கற்பழித்து கொலை செய்த காமக்கொடூரனுக்கு தூக்குதண்டனை விதித்து மும்பை செசன்ஸ் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு அளித்து உள்ளது.

மும்பை வில்லேபார்லே பகுதியில் தனது பெற்றோருடன் வசித்து வந்த இளம்பெண் சரத்தா(வயது24). பிசியோதெரபிஸ்ட்டாக இருந்து வந்தார். கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 6-ந்தேதி இரவு சரத்தா வீட்டின் மேல் தளத்தில் உள்ள அறையில் தனியாக தூங்கிக்கொண்டு இருந்தார். பெற்றோர் கீழ் தளத்தில் உள்ள அறையில் இருந்தனர்.

இதில், அதிகாலை 3.30 மணியளவில் சரத்தாவின் அறையில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் அறைக்குள் சென்று பார்த்தபோது, அங்கு இருந்த புத்தகங்கள் எரிந்து கொண்டு இருந்தது.

மேலும் இளம்பெண் சரத்தா நிர்வாணமாக கிடந்தார். அவர் ஜீன்ஸ் பேண்டால் கழுத்து நெரிக்கப்பட்டு மயங்கிய நிலையில் கிடந்தார்.

தகவல் அறிந்து சென்ற போலீசார் இளம்பெண்ணை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறினர். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

இதில் சரத்தா கற்பழிக்கப்பட்டு, பின்னர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணின் வீட்டை சுற்றி வசித்த சுமார் 100-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தினர். மேலும் அவரது வீடு அமைந்து உள்ள இடத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.

இதன் மூலம் சரத்தாவை கற்பழித்தது, அவரது வீட்டின் அருகே தங்கியிருந்து நகைக்கடையில் வேலை பார்த்து வந்த தேபாஜிஸ் தாரா(வயது29) என்பது தெரியவந்தது.

இதையடுத்து சொந்த ஊரான மேற்கு வங்கம் மாநிலம் மெதினிபூரில் பதுங்கி இருந்த தேபாஜிஸ் தாராவை போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில், சம்பவத்தன்று தேபாஜிஸ் தாரா குடிபோதையில் இளம்பெண்ணின் அறைக்குள் அத்துமீறி நுழைந்து உள்ளார். அவர் அங்கு தனியாக இருந்த இளம்பெண்ணை கொடூரமான முறையில் கற்பழித்து, பின்னர் கழுத்தை நெரித்து கொலை செய்து உள்ளார். அதன் பிறகும் காமப்பசி தீராமல் அவரது உடலுடன் உறவில் ஈடுபட்டுள்ளார்.

பின்னர் அங்கு கிடந்த புத்தகங்களை அவர் மீது போட்டு தீவைத்துவிட்டு தப்பிச்சென்றது தெரியவந்தது.

இந்த வழக்கு மீதான விசாரணை மும்பை செசன்ஸ் கோர்ட்டில் நடந்து வந்தது. இதில் வழக்கை விசாரித்த நீதிபதி அபிஸ்ரீ தியானேஷ்வர் தேவ், கடந்த 24-ந்தேதி அவரை குற்றவாளி என அறிவித்து இருந்தார். இந்தநிலையில் நேற்று இந்த வழக்கில் நீதிபதி தீர்ப்பு அளித்தார்.

இதில் அவர், இளம்பெண்ணை கொடூரமான முறையில் கற்பழித்து கொலை செய்த குற்றத்துக்காக வாலிபர் தேபாஜிஸ் தாராவுக்கு தூக்குதண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பு வழங்கினார்.

Advertisements

Leave a Reply