Home சினிமா ரஜினி ரசிகர்களுக்கு செம ட்ரீட், மாஸா வெளியான அடுத்தப்பட அறிவிப்பு

ரஜினி ரசிகர்களுக்கு செம ட்ரீட், மாஸா வெளியான அடுத்தப்பட அறிவிப்பு

203
0

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடைசியாக இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியிருந்த, ’பேட்ட’ திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் கடந்தாண்டு பொங்கலுக்கு வெளியாகியிருந்தது. தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் ’தர்பார்’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். நயன்தாரா ஹீரோயினாக நடிக்கும் இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.

இந்நிலையில் ரஜினியின் ரசிகர்களுக்கு மிகுந்த சந்தோஷத்தைக் கொடுக்கும் ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அதாவது ரஜினியின் அடுத்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. கடந்த சில தினங்களாக வெளியாகிக் கொண்டிருந்த செய்திகளின்படி, அந்தப் படத்தை இயக்குநர் சிவா இயக்குகிறார். இது ரஜினியின் 168-வது படமாக உருவாகிறது.

இதைப் பற்றி அதிகாரப்பூர்வமாக தற்போது சன்பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்கு முன் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ‘எந்திரன்’, ‘பேட்ட’ ஆகிய பிளாக்பஸ்டர் படங்களில் நடித்துள்ளார் சூப்பர் ஸ்டார். தவிர தலைவர் 168 படத்தின் ஹீரோயின், பிற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விஷயங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisements

Leave a Reply