Home செய்திகள் தமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவல் எச்சரிக்கை

தமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவல் எச்சரிக்கை

174
0

“கோவையில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவி இருக்கின்றனர். கோயில், மசூதி மற்றும் தேவாலயங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கோவை மாநகரம் முழுவதும் 2 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்” என்று கோவை மாநகர காவல் ஆணையர் சுமித் சரண் தெரிவித்துள்ளார்.

அதே போல தமிழகத்தின் தலைநகர் சென்னையிலும், இலங்கையை ஒட்டியுள்ள கடல் எல்லையிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (வெள்ளிக்கிழமை) காலை ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது, செய்தியாளர்களிடம் பேசிய சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், தீவிரவாத அச்சுறுத்தல் வந்தது உண்மைதான் என்றும், நேற்று இரவில் இருந்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

எந்த அசம்பாவிதங்களும் நடக்காமல் இருக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் அவர் கூறினார்.

கோவையில் வழக்கத்திற்கு மாறாக காவல் துறையினர் பல இடங்களில் வாகன சோதனைகளில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisements

Leave a Reply